Share on Social Media

ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்தது இங்கிலாந்து அணி. ரூட், அலி, ஸ்டோக்ஸ் என முறையே மூவரும் சதம் அடித்து ஆதிக்கம் செலுத்த, அந்த அணி 500 ரன்களைத் தாண்டி ஆட்டமிழந்தது. இதற்குப் பதிலடியாக முரளி விஜய்யும், புஜாராவும் சதம் விளாச இந்திய அணி 488 ரன்கள் குவித்தது. இரு அணிகள் ஆடிய முதல் இன்னிங்க்ஸ் மட்டுமே 320 ஓவர்கள் வரை செல்ல நான்காம் நாள் இரண்டாவது செஸ்ஷனில் தொடங்கிய இரண்டாவது இன்னிங்க்ஸ் இறுதியில் டிராவில் நிறைவானது. இரண்டாவது போட்டியில் லெக் ப்ரேக் பௌலரான மிஷ்ராவுக்கு பதில் கூடுதல் ஆப் ஸ்பின்னராக அறிமுகமானார் ஜெயந்த் யாதவ்.

INDvENG 2016-17 | குக்

INDvENG 2016-17 | குக்
AP

சென்ற போட்டி போல இதிலும் இரண்டு இந்தியர்கள் – கோலி மற்றும் புஜாரா சதம் விளாசி 400 ரன்களைக் கடக்கச் செய்ய 5 விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியை 255 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார் அஷ்வின். பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் 200 ரன்கள் என்ற முன்னிலையில் ஆடிய இந்திய அணி இங்கிலாந்தை 405 என்ற இலக்கை சேஸ் செய்ய அழைத்தது. ஆனால், இந்திய ஸ்பின் டிப்பார்ட்மென்டின் மூவர் கூட்டணி எந்தவொரு எதிரணி பேட்ஸ்மேனையும் செட்டில் ஆகவிடாமல் ஆட்டமிழக்கச் செய்ய 158 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து அணி. மொஹாலியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட்டிலும் இதுபோலவே பார்ட்னர்ஷிப் கட்டமைப்பில் இந்திய பௌலர்களிடம் இங்கிலாந்து சொதப்ப நான்காவது நாளிலேயே ஆட்டத்தை முடித்தது இந்தியா.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *