Share on Social Media


என் மனைவிக்குக் கொரோனாத் தொற்று இல்லை என்பதும், கூடுதலாகக் கொரோனாவுக்கு எதிரான சக்தி (antibody) அவர் உடலில் இருக்கிறது என்பதும் தெரிந்தது. அவர் முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தார். எதிர்ப்பு சக்தியை அவர் அதிலிருந்துதான் பெற்றிருக்க வேண்டும். ஆனால் இரண்டு ஊசிகள் போட்டுக் கொண்ட எனக்கு அப்போதும் குறிப்பிடத்தக்க எதிர்ப்பு சக்தி உருவாகவில்லை. உடற்கூறியலும் மருத்துவமும் நேரான சூத்திரங்களுக்குக் கட்டுப்படுவதில்லை போலும்.

மே 25 அன்று எனது தனிமையை மாநகராட்சி அலுவல் ரீதியாக முடிவுக்குக் கொண்டுவந்தது. வீட்டு வாசலில் இருந்த அறிவிப்பை நகராட்சி ஊழியர் சுரண்டி அகற்றினார். அவரது பேரட்டில் அன்றையத் தேதியில் எனது பெயருக்கு நேரே குணமடைந்துவிட்டதாகக் குறித்துக்கொண்டார். இன்னொரு ஊழியர் வீட்டின் எல்லா அறைகளிலும் கிருமி நாசினி தெளித்துச் சுத்திகரித்தார்.

Oxygen Level

Oxygen Level
AP Photo / Rafiq Maqbool

மே 26, 2021… தமிழகத்தில் முந்தைய நாள் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28,475 என்று நாளிதழில் கண்டிருந்தது. இதில் சென்னைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டும் 8,033. இந்த எண்ணிக்கையில் ஒன்று கூடுவதற்கு நான் காரணமாக இருந்திருக்கிறேன்.

என்னுடைய கொரோனா கதை தலைகீழாக எழுதப்பட்டது. அது பாதுகாப்பு ஏற்பாடுகளில் தொடங்கியது. தடுப்பூசி, பிறகு தொற்று, காய்ச்சல், தனிமை, சிகிச்சை என்று தொடர்ந்து இப்போது மீண்டும் பாதுகாப்பிற்கு வந்திருக்கிறது. தடுப்பூசி எனக்கு உதவியிருக்கிறது. இந்தத் தடுப்பூசிகள், புதிய மாற்றுரு காற்றில் கலப்பதற்கு முன்னால் கண்டறியப்பட்டவை. என்னைப் போன்ற சிலருக்குத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் தொற்று வந்திருக்கலாம். ஆனால், தடுப்பூசி ஒரு காப்பரணாக நின்று நோயை எதிர்கொள்வதில் பயன்பட்டிருக்கிறது. தடுப்பூசி, முகக்கவசம், தனிமனித இடைவெளி, கை சுத்தம் ஆகிய அனைத்தும் நம்மைக் கோவிட்டிலிருந்து காப்பாற்றும். வாழ்க்கை உன்னதமானது. மதிப்புமிக்கது. போனால் வராது. ஆதலால், நாம் பாதுகாப்பு நெறிமுறைகளைச் சமரசமின்றிக் மேற்கொள்வோம். அறிவியலைக் கைக்கொள்வோம். அது மட்டுமே நம்மைக் காக்க வல்லது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *