Share on Social Media


சென்னை : தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி, தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக இன்று காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2021-2022ம் ஆண்டுக்கான 273 பக்கங்கள் கொண்ட வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். நேற்று தாக்கல் செய்யப்பட்டது போன்று வேளாண் பட்ஜெட்டும், மின் வேளாண் (இ-வேளாண்) பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியது பின்வருமாறு..

*டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட்டை காணிக்கை ஆக்குகிறேன்.

*விவசாயிகளிடம் கருத்துக்கேட்ட பின்னரே இந்த வேளாண் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.தஞ்சை, கோவை, கிருஷ்ணகிரி  மாவட்ட விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தேன்.

*வேளாண் வணிகர்களின் கோரிக்கைகளையும் கேட்டபின் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.உழவர்களை உயர்த்தி அழகு பார்க்கும் நோக்கத்தோடு வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட்

*உலகளாவிய வேளாண் வல்லுநர்களின் கருத்துகளை கேட்டும் இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது

*வேளாண்துறையை சவால்களில் இருந்து மீட்டெடுக்கும் தொலைநோக்கு பார்வையுடன் தனி பட்ஜெட்
உணவு தன்னிறைவைத் தமிழகம் ஓரளவிற்கு எட்டிவிட்டது. உணவுப்பாதுகாப்பையும், ஊட்டச்சத்து பாதுகாப்பையும் அடுத்து 10 வருடங்களுக்குள் அடைந்துவிட வேண்டும் என்பதே அடிப்படை நோக்கம்

*தற்போதுள்ள நிகர சாகுபடிப் பரப்பான 60 விழுக்காட்டை 75 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை

*தமிழகத்தில் கூடுதலாக 11.75 லட்சம் எக்டர் பரப்பில் சாகுபடி செய்ய இலக்கு

*10 லட்சம் எக்டர் பரப்பளவிலான இருபோக சாகுபடியை அடுத்த 10 வருடங்களில் 20 லட்சம் எக்டராக உயர்த்த இலக்கு

*வேளாண் தொகுப்புத் திட்டம், இளைஞர்களை வேளாண் தொழிலில் ஈடுபடுத்துதல் உள்ளிட்ட 16 அம்சங்களுடன் பட்ஜெட்

*கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் எனும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்

*கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் முதற்கட்டமாக 2500 கிராமங்களில் செயல்படுத்தப்படும்

*இருபோக சாகுபடி நடைபெறும் பரப்பை 10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்த நடவடிக்கை;

*இயற்கை வேளாண்மை விவசாயிகளுக்கு இடுபொருள் மானியம் வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்படும்.

*வேளாண்மை துறையில் இயற்கை வேளாண்மை என்று தனிப்பிரிவு உருவாக்கப்படும்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *