NTLRG 20201101142629740906 Tamil News Spot
Share on Social Media

இயக்குனர் ஆகிறார் மனோஜ் பாரதி

01 நவ, 2020 – 14:26 IST

எழுத்தின் அளவு:


Manoj-bharathi-as-director

1999ம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் படத்தில் தனது மகன் மனோஜ் பாரதியை நடிகராக அறிமுகப்படுத்தினார் இயக்குனர் பாரதிராஜா. அதன்பிறகு சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜூனா, வருஷமெல்லாம் வசந்தம், பல்லவன், ஈர நிலம் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தார். அதன்பிறகு சரியான வாய்ப்பு இல்லாமல் சின்ன சின்ன கேரக்டர்களிலும் நடித்தார்.

இந்த நிலையில் இயக்குனாராகிறார் மனோஜ் பாரதி. சுட்ட கதை, நளனும் நந்தினியும், உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்திருக்கும் லிப்ரா புரொடெக்சன்ஸ் நிறுவனம் சார்பில் ரவீந்தர் சந்திரசேகர் இதை தயாரிக்கிறார். இது மனோஜ் பாரதி இயக்குவதாக சொல்லிக் கொண்டிருந்த சிகப்பு ரோஜாக்கள் 2ம் பாகமா அல்லது வேறு கதையா என்று தெரியவில்லை. படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *