Tamil News Spot
Share on Social Media

“வரி செலுத்துவோரின் கோரிக்கையை ஏற்று கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தணிக்கை செய்யப்பட வேண்டிய கணக்குகளுக்கு மட்டுமே ஜனவரி 31-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தணிக்கை கணக்கு தேவைப்படாதவர்கள் தங்கள் வரியை டிசம்பர் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும். தவறும் பட்சத்தில் ஜனவரி முதல் அபராதம் செலுத்தி கணக்கு தாக்கல் செய்யவேண்டும்” என்று வருமான வரித்துறை இதுகுறித்துத் தெரிவித்துள்ளது.

வருமான வரி

வருமான வரி

எப்போதுமே தாமதமாக வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு, வருமான வரித்துறை 5,000 ரூபாயை அபராதமாக விதிக்கும். ஆனால், இந்த முறை, டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு, செய்யப்படும் வரித்தாக்கல் அறிக்கைக்கு அதிக அபராதக் கட்டணத்தை வசூலிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. அந்த வகையில் 5 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் இருந்தால், 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும், 5 லட்ச ரூபாய்க்கும் குறைவாக வருமானம் இருந்தால் 1,000 ரூபாய் அபராதம் செலுத்தவேண்டும்.

நீங்கள் மார்ச் 31, 2021-ம் தேதியும் வருமான வரி செலுத்தவில்லை எனில், அபராதமாக உங்கள் வருமானத்துக்கு 50% வரையிலான வரி விதிக்கப்படும். மேலும், டிசம்பர் 31-ம் தேதிக்குள் வருமான வரியைத் தாக்கல் செய்யத் தவறினால், வருமான வரித்துறை வழங்கும் பல்வேறு சலுகைகளை இழக்க நேரிடும். அதனால் நாளை வியாழக்கிழமைக்குள் வருமான வரியை செலுத்திவிடுவது நல்லது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *