Share on Social Media


”தி.மு.க-வில் அறிவாளிகளுக்கு இடமில்லை” என ஆவேசப்பட்டு கட்சியை விட்டு வெளியேறிவர் மூத்த அரசியல் தலைவரான பழ.கருப்பையா. தற்போது மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், சமகால தமிழக அரசியல் குறித்த கேள்விகளோடு பழ.கருப்பையாவை நேரில் சந்தித்தேன்….

”2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ம.நீ.ம கலகலத்துப் போய்விட்டதே…?”

”திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக, மாநில உரிமை, மொழியுரிமை, இந்துத்துவ எதிர்ப்புகளை வலியுறுத்துகிற ஓர் அமைப்பு இங்கே கட்டப்படவேண்டும் என்பதுதான் என் கருத்து. இன்றைய காலகட்டத்தில், கமல்ஹாசனால் அதை வலிமையான கட்டமைப்பாக செய்யமுடியாவிட்டாலும், நாளை அது காலத்தின் கட்டாயமாக இருக்கும்!

மு.க.ஸ்டாலின், டாக்டர் மகேந்திரன், பத்மபிரியா

மு.க.ஸ்டாலின், டாக்டர் மகேந்திரன், பத்மபிரியா

கடந்த 50 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில், ஊழல் மலிந்துவிட்டது. இந்த சூழ்நிலையில், இவர்களுக்கு மாற்றாக ஒரு புதிய பார்வையுடைய அமைப்பாக இருந்துவருகிறது ம.நீ.ம.! அது வளர்ந்திருக்கிறதா, வளரவில்லையா என்பதெல்லாம் முக்கியமில்லை! இது காலத்தின் தேவை… எனவே வளர்க்கப்பட வேண்டும்! மற்றபடி, கட்சியில் யார் வெளியே போகிறார்கள்; யார் உள்ளே வருகிறார்கள் என்பதையெல்லாம் சிந்தித்து எனக்குப் பழக்கம் இல்லை. எங்களுடன் சேர்ந்து யாரெல்லாம் முழங்குகிறார்கள் அல்லது வெளியேறிவிட்டார்கள் என்பதெல்லாம் முக்கியம் இல்லை!”



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *