Share on Social Media


ஆலந்தூர்: ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் கம்ப்யூட்டர் பிரிவு  பெண் காவலராக பணிபுரிந்து வருபவர் உஷா. இவர், காவல்துறை வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்ட ஒரு ஆடியோ சமூக வளைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த ஆடியோவில் பெண் காவலர் உஷா கூறியிருப்பதாவது: ஆதம்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு நான் அடிபணிய வேண்டும் என்பதற்காக தாங்க முடியாத அளவிற்கு வேலை கொடுக்கிறார். ஒருகட்டத்தில் நான் பணி செய்ய முடியாத நிலைக்கு சென்றேன். எனக்கு, முதுகு தண்டுவடம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. எனது தாய்க்கு புற்றுநோய் உள்ளது. அவரை கவனித்துக்கொள்ள முடியாத நிலை உள்ளது. இதனால், கடந்த ஒரு வாரமாக விடுப்பில் சென்றுவிட்டு மீண்டும் பணிக்கு சேர்ந்தேன். தற்போதும் அதிக பணி கொடுக்கிறார்.

கொடுக்கும் பணியை செய்ய முடியவில்லை என்றால் டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு போ என கூறுகிறார். எந்த தவறும் செய்யாமல் நான் ஏன் டிரான்ஸ்பர் பெற வேண்டும். நான் தற்கொலை செய்து கொண்டால்தான் தீர்வு கிடைக்கும் போலிருக்கு. இவ்வாறு கூறியுள்ளார். இந்த ஆடியோ வெளியானதும் பரங்கிமலை துணை கமிஷனர் பிரபாகரன், பெண் காவலர் உஷாவை தொடர்பு கொண்டு பேசினார். மேலும், புகாரை சமூக வளைதளங்களில் பதிவிடாமல், தன்னிடமே கூறியிருக்கலாம் என்றார். இதையடுத்து, அந்தப் பெண் போலீசுக்கு விடுப்பு வழங்கி வீட்டுக்கு அனுப்பிவைத்ததாக கூறப்படுகிறது.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *