Share on Social Media


சென்னை-கொரோனா தொற்றுப்பரவலை தடுக்க, இன்று முதல், அனைத்து கடைகளும், நண்பகல், 12:00 மணி வரை மட்டுமே இயங்கும் என, அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருவதை உறுதி செய்யவும், விதிமீறிலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், மண்டல வாரியாக குழுக்கள் அமைத்து, சென்னை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து, மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர், மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், நேற்று ஆலோசனை நடத்தினர்.கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் பேசியது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது:கொரோனா பரவலை தடுக்க, இன்று முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள், மாநகராட்சியில் முழுவதுமாக செயல்படுத்தப்படும்.அதன்படி, காய்கறி மற்றும் மளிகை கடைகள் அரசு அறிவுறுத்தலின்படி, நண்பகல், 12:00 மணிக்குள் மூடப்படும். அதை அந்தந்த மண்டல அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். மேலும், இவற்றை கண்காணிக்க, மாநகராட்சி அதிகாரி, போலீஸ் அதிகாரி, வருவாய்த் துறை அதிகாரி என, மூன்று பேர் கொண்ட குழு, மண்டல வாரியாக நியமிக்கப்படுகிறது. இந்த குழுவினர், நண்பகலுக்கு பின், ஒவ்வொரு பகுதிக்கும் சென்று, கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என கண்காணிப்பர். விதிமீறி கடைகள் திறந்திருந்தால், அவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், மூடி சீல் வைக்கப்படும்.புதிய கட்டுப்பாடுகள் அமலாக உள்ளதால், பொதுமக்கள் ஒரே இடத்தில் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். அதேபோல், காசிமேடு மீன் மார்க்கெட், கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளில், மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும். இதில், பால், நாளிதழ் வினியோகத்திற்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை. அதே நேரத்தில், வீடு, வீடாக செல்லும் இவர்கள் அனைவருக்கும், முன்னுரிமை அடிப்படையில், தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, கமிஷனர் கூறியதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

தயாராகுது தாசில்தார் பட்டியல்கொரோனா தடுப்பு பணிகளில், கடந்தாண்டு மாநகராட்சியுடன், மாவட்ட வருவாய்த் துறை தாசில்தார்கள் இணைந்து பணியாற்றினர். அதேபோல், இந்தாண்டும், ஆய்வு மற்றும் காண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, சென்னை மாநகராட்சியில், 15 மண்டலங்களில் பணியாற்ற, தலா, 15 தாசில்தார்கள் மற்றும் துணை தாசில்தார்கள் பெயர் பட்டியலை, மாவட்ட நிர்வாகம் தயார் செய்து வருகிறது.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *