Share on Social Media


திருப்பூர்:சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மே 2ல் நடக்கிறது. இன்னும் நான்கு நாட்களே உள்ளன. ஓட்டு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் முடியும் தருவாயில் உள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை, தலா, 14 டேபிள்களில் நடக்கிறது. தனி அறையில், இரண்டு டேபிள்களில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட உள்ளன. அதற்கான, ‘டிரே’ தயாரிப்பு பணிகளும் நடந்து வருகிறது.

ஓட்டு எண்ணிக்கைக்கான டேபிள் – சேர்கள், சமூக இடைவெளியுடன் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு டேபிளுக்கும், ‘சிசிடிவி’ கேமரா பொருத்தும் பணியும் நிறைவடைந்துள்ளது.ஒவ்வொரு டேபிளுக்கும், நுண் பார்வையாளர் மற்றும் ஓட்டு எண்ணிக்கை அலுவலர், உதவியாளர் என, மூன்று பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஓட்டு எண்ணிக்கை, சரியாக, 8:00 மணிக்கு துவங்கும், முதலில் தபால் ஓட்டு எண்ணிக்கை துவங்கி வைக்கப்பட்ட பிறகு, இயந்திர ஓட்டு எண்ணிக்கையும் துவங்கப்படும்.

எட்டு தொகுதிகளில் அமைத்திருந்த, 3,343 ஓட்டுச்சாவடிகளில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படும். பல்லடத்தில், 548 ஓட்டுச்சாவடிகளும், திருப்பூர் வடக்கில், 535 ஓட்டுச்சாவடியும் இருந்ததால், அதிகபட்சமாக, 40 சுற்றுகள் ஓட்டு எண்ணிக்கை நடக்கும்.30 சுற்றுக்கள்அவிநாசி மற்றும் திருப்பூர் தெற்கில், தலா, 401 ஓட்டுச்சாவடிகள் என்பதால், அதிகபட்சமாக, 29 சுற்றுகளில் முடிவு தெரிந்துவிடும். மற்ற தொகுதிகளில், 25 முதல், 30 சுற்றுகளில் முடிவு தெரிந்துவிடும்.ஒவ்வொரு சுற்று முடிவுகளையும், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறிவிப்பர். தபால் ஓட்டுகள், அதிகபட்சமாக, 12:00 மணிக்குள் எண்ணி முடிக்கப்படும்.

ஓட்டு எண்ணிக்கை நிறைவடைந்த பிறகு, தபால் ஓட்டுக்களையும் சேர்த்து, வேட்பாளர் ஒவ்வொருவரும் பெற்ற ஓட்டு விவரம் அறிவிக்கப்படும்.கடந்த ஆண்டுகளில், அதிகபட்சமாக, 25 சுற்றுகள் வரை மட்டுமே நடந்தது. இம்முறை, 25 முதல் 40 சுற்றுகள் வரை நடப்பதால், முடிவு தெரிய கூடுதல் தாமதம் ஏற்படும். அதன்படி, அலுவலர்கள், கட்சி ஏஜன்ட்களுக்கு மூன்று வேளை உணவு, ‘டீ-காபி’ உள்ளிட்ட வசதிகளை செய்துகொடுக்க, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.
அதிகாரிகள் கூறுகையில், ‘ஓட்டு எண்ணிக்கை பணி ஒருபுறம் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. பணிக்கு செல்லும் அலுவலர், ஏஜன்ட்களுக்கு, 29 ல் கொரோனா பரிசோதனை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. தொற்று பரவல் அதிகமாக இருப்பதால், அச்சமின்றி ஓட்டு எண்ணும் பணியை தொடரும் வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்,’ என்றனர்.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *