Share on Social Media

சில மணிநேரம் கழித்து எனது கைப்பேசி மற்றும் இ-மெயிலில் தங்களது பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்தது. அதற்குப் பிறகு, உடனே நான் என்னுடைய டெபிட் காட்ர்டை பிளாக் செய்ய வாடிக்கையாளர் எண்ணை (1800 11 2211) தொடர்புகொண்டும் மற்றும் உடனடியாக வங்கியின் கிளையை அணுகியும் நடந்தவற்றைச் சொன்னேன். அவர்கள் மூலமாக இன்டர்நெட் பேங்கிங் வசதியை செயல் இழக்க வைத்தேன்.

அத்துடன் எஸ்.பி.ஐ-யின் வாடிக்கையாளர் இமெயில் வசதியின் மூலமாக நடந்தவற்றைப் பதிவு செய்தேன். ([email protected], [email protected]) மற்றும் http://cmcell.tn.gov.in வலைதளத்திலும் நடந்தவற்றைப் பதிவு செய்தேன்.

அதன் பிறகு https://cybercrime.gov.in வலைதளத்தில் எனக்கு நடந்த இச்செயலைப் பற்றி புகார் அளித்தேன். புகார் அளித்த மறுதினம் விசாரணைக்காக மாவட்ட சைபர் கிரைம் அலுவலகத்துக்கு என்னை அழைத்தனர். இவ்விசாரணையிலிருந்து எனக்கு புலப்பட்டது என்னவென்றால், விட்ட பணம் திரும்ப கிடைக்காது.

புகார் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதை ஒரு மனுவின் மூலமாக பெற்றுக் கொண்டனர். ஒருவேளை விசாரணையில் முன்னேற்றம் நடந்தால் அதைப் பற்றி புகார் அளித்த பதிவுகளில் அறிந்துகொள்ளலாம் என்றும் இது போன்ற சைபர் கிரைம் சம்பந்தப்பட்ட செயல்களை 155260 இலவச எண்ணுக்கு உங்களின் புகார்களைப் பதிவு செய்லாம்; புகாரின் நிலையை அறிந்துகொள்ளலாம் என்றும் தெரிவித்தனர்.

எஸ்.பி.ஐ-யின் வாடிக்கையாளர் சேவை மையமும், “நீங்கள் இழந்த பணத்துக்கு வங்கி பொறுப்பாகாது” என்று அறிவுரைகளை வழங்கி விடை பெற்றுக்கொண்டனர்.

இதனால், இது போன்ற உறுதியற்ற குறுஞ்செய்திகளைக் கண்டு அதைப் பின் தொடர்வதையும், அதில் உங்களுடைய முக்கிய தகவல்களைத் கொடுப்பதையும் தயவு செய்து தவிர்க்கவும்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *