Share on Social Media


நயன்தாராவுடன் இணைத்து இந்த லிப் பாம் பிசினஸில் கைகோத்துள்ள ரெனிட்டா ராஜன் கூறுகையில், “ஆரம்பத்தில், மிகவும் மென்மையான உதடுகளைப் பாதுகாக்கும் சிறந்த லிப் பாம் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டோம். இது படிப்படியாக வளர்ந்து ஒரு தனித்துவமான தயாரிப்பாக மாறியுள்ளது. லிப் பாம் உதடுகளை மேம்படுத்தி மென்மையாக்குவது மட்டுமல்லாமல், அவற்றை பளபளப்பாகவும் மாற்றும். அந்தக் கூறுகளை மனதில்கொண்டு எங்கள் லிப் பாமை தயாரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தவிருக்கிறோம்” என்கிறார்.

நயன்தாரா - ரெனிட்டா ராஜன்

நயன்தாரா – ரெனிட்டா ராஜன்

தங்களது லிப் பாமை நவீனமாகவும், முற்றிலும் இயற்கையான பொருள்களைக் கொண்டு தயாரிக்க உள்ளதாகவும் இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நடிகை, தயாரிப்பாளர் எனத் தன் அடையாளங்களை அமைத்துக்கொண்ட நயன்தாரா, சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த `Chai Waale’ என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தார். இப்போது தொழில்முனைவோராகக் களம் இறங்கியிருக்கிறார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.