Share on Social Media


தமிழக பா.ஜ.க., தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை, வருகிற 16-ம் தேதி சென்னை கமலாலயத்தில் தமிழக பா.ஜ.க., தலைவராக பொறுப்பேற்றுக் கொள்ள இருக்கிறார். அந்த நிகழ்ச்சிக்காக நேற்று கோவையிலிருந்து கட்சி நிர்வாகிகளுடன் பேரணியாகக் கிளம்பியவர் திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் வழியாக சென்னையைச் சென்றடைகிறார். இந்த பேரணியின்போது நேற்று (ஜூலை 14) திருப்பூருக்கு வந்த அண்ணாமலைக்கு, திருப்பூர் மாவட்ட பா.ஜ.க., நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த வரவேற்பு விழா நிகழ்ச்சியில் பேசிய திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க., தலைவர் செந்தில்வேல், “தமிழகத்தில் பா.ஜ.க., ஆட்சிக்கு வருவது முக்கியமல்ல. தமிழக மக்களுக்கு திராவிட கும்பலிடம் இருந்து விடுதலை பெற அண்ணாமலை முதலமைச்சர் ஆக வேண்டும் என்பது விதியாகும்’ என்றதோடு சிலபல டயலாக்குகளைப் பேச என்ன ரியாக்‌ஷன் கொடுப்பதெனத் தெரியாமல், மொத்தக் கூட்டமும் விழிபிதுங்கி நின்றது.

திருப்பூரில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அண்ணாமலை

திருப்பூரில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அண்ணாமலை

அதனையடுத்து மைக் பிடித்த அண்ணாமலை, “தமிழகத்திலேயே உண்மையான சித்தாந்தத்தின் அடிப்படையில் இருக்கக்கூடிய கட்சி பாரதிய ஜனதா கட்சி. சித்தாந்தத்தில் எந்த ஒரு கட்சியும் நமக்கு அருகாமையில் வர முடியாது. ஏனென்றால் உண்மையான நாட்டுப்பற்று, தேசியப்பற்று இருக்கக்கூடிய நண்பர்கள் அனைவரும் இங்கு தான் இருக்கின்றனர். இத்தனைக் காலமாக பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழகம் தேவைப்பட்டது. இப்பொழுது தமிழ்நாட்டிற்கு பாரதிய ஜனதா கட்சி தேவைப்படுகிறது. ஏனென்றால் இங்கு திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய 45 நாள் ஆட்சியை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *