Share on Social Media

தற்போதுள்ள தேசிய தானியங்கி கிளியரிங் ஹவுஸ் (National Automated Clearing House – NACH) நடைமுறைகளின் படி, வார விடுமுறை நாள்கள் மற்றும் அரசு விடுமுறை நாள்களில், சம்பளம், பென்ஷன் பெறுவோர்களுக்கான பணத்தை வங்கிகள் பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்காது. வேலை நாட்களில் மட்டுமே வரவு வைக்கும்.

ஆனால், வருகிற ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அனைத்து விடுமுறை நாள்களிலும் சம்பளம், பென்ஷன் போன்றவை பயனாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும் என ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது.

சக்திகந்த தாஸ் – ஆர்.பி.ஐ

கடந்த ஜூன் 4-ம் தேதி, ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகந்த தாஸ், இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், “வாடிக்கையாளர் வசதிக்காக, ஆண்டின் அனைத்து நாட்களிலும் ஆர்.டி.ஜி.எஸ் (RTGS) பயன்படுத்திக் கொள்ளவும், ஆண்டு முழுவதும் வாரத்தின் அனைத்து நாட்களிலும் என்.ஏ.சி.ஹெச் சேவை கொடுக்கவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

என்.ஏ.சி.ஹெச் என்றால் என்ன?

மொத்தமாக பணம் செலுத்தும் முறைதான் என்.ஏ.சி.ஹெச் முறை என்று அழைக்கப்படுகிறது. அதிக எண்ணிக்கையிலான பயனாளிகளுக்கு ஒரே நேரத்தில் பணம் செலுத்த இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. அதாவது, இந்த முறையின் மூலம் ஈவுத்தொகை (Dividend), வட்டி, சம்பளம், ஓய்வூதியம் என பலவிதமான டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களை ஒரே நேரத்தில் செலுத்த முடியும்.

p35e Tamil News Spot
money

இவற்றைத் தவிர, மின்சாரம், சமையல் எரிவாயு, தொலைபேசி கட்டணம், குடிநீர் கட்டணம், கடன்களுக்கான குறிப்பிட்ட தவணைகள், முதலீடுகள், மியூச்சுவல் ஃபண்ட், காப்பீட்டு பிரீமியம் செலுத்துவதற்கான கட்டண முறைக்கும் என்.ஏ.சி.ஹெச் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, அரசாங்க மானியங்களை பயனாளிகளின் கணக்குக்கு மாற்றுவதற்கு இது பெரிதும் உதவுகிறது. மேலும், தற்போதைய கொரோனா காலத்தில் உரிய நேரத்தில், வெளிப்படையான முறையில் பணப்பரிமாற்றத்திற்கு இந்த முறை பெரிதும் பயன்பட்டு வருவதாகவும் ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது.

ஆக, இனி சம்பளம் நாள் விடுமுறை நாட்களில் வந்தால், வேலை நாட்கள் வரை காத்திருக்கத் தேவையில்லை!.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *