Share on Social Media

தாஷ்கென்ட்: ஜூனியர் உலக பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் அசின்டா வெள்ளி வென்றார்.

உஸ்பெகிஸ்தானில் ஜூனியர் உலக பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதன் 73 கி.கி., எடைப்பிரிவில் இந்தியாவின் 19 வயது வீரர் அசின்டா ஷியுலி, ‘ஸ்னாட்ச்’ பிரிவில் 141 கி.கி., எடை துாக்கினார். அடுத்து ‘கிளீன் அண்டு ஜெர்க்’ பிரிவில் 172 கி.கி., துாக்க, மொத்தம் 313 கி.கி., எடை துாக்கி, இரண்டாவது இடம் பெற்று, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.

இந்தோனேஷியாவின் ஜூனையின்ஷா, மொத்தம் 349 கி.கி., எடை துாக்கி, தங்கப்பதக்கம் தட்டிச் சென்றார். ரஷ்ய வீரர் செரோபியனுக்கு (308 கி.கி.,) வெண்கலம் கிடைத்தது.

 

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *