Share on Social Media


டெல்லி : ஒரு நாள் பயணமாக இன்று பிற்பகலில் டெல்லி வரும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியா – ரஷியா உச்சி மாநாடு டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக மாஸ்கோவில் இருந்து டெல்லி வரும் புதின், விமான நிலையத்தில் இருந்து நேராக மாநாடு நடைபெறும் ஐதராபாத் இல்லத்திற்கு செல்கிறார். அங்கு பிரதமர் மோடி அவரை வரவேற்கிறார். அதன்பின்னர் 2 தலைவர்களும் தங்கள் நாட்டு உயர்மட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அதனைத் தொடர்ந்து மோடியும் புதினும் தனியாக சந்தித்து பேசுகின்றனர்.

உச்சி மாநாட்டின் முடிவில் 2 நாடுகளுக்கு இடையே வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம் உள்ளிட்ட 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. மோடி, புதின் சந்திப்பிற்கு முன்னதாக 2 நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மற்றும் ராணுவ அமைச்சர்கள் இடையிலான பேச்சுவார்த்தையும் நடைபெறுகிறது. அதில் 2 தரப்பு உறவு, மண்டல சர்வதேச அரசியல் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநாடு நிறைவடைந்ததும் விளாடிமிர் புதின் நாடு திரும்புகிறார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.