Share on Social Media

டான்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஏமாற்றிய இந்திய பெண்கள் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வென்றது. டான்டனில் 2வது போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா (22), ஷபாலி வர்மா (44) ஜோடி நல்ல தவக்கம் தந்தது. கேட் கிராஸ் ‘வேகத்தில்’ ஜெமிமா ரோட்ரிக்ஸ் (8), ஹர்மன்பிரீத் கவுர் (19), தீப்தி சர்மா (5), ஸ்னே ரானா (5) வெளியேறினர். தானியா பாட்யா (2), ஷிகா பாண்டே (2) ஏமாற்றினர். பொறுப்பாக ஆடிய கேப்டன் மிதாலி ராஜ் (59) அரைசதம் கடந்தார். சோபி எக்லெஸ்டோன் ‘சுழலில்’ பூணம் யாதவ் (10) சிக்கினார்.

இந்திய அணி 50 ஓவரில் 221 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. ஜுலன் கோஸ்வாமி (19) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் கிராஸ் 5 விக்கெட் கைப்பற்றினார்.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு டாமி பியுமான்ட் (10), கேப்டன் ஹீதர் நைட் (10) ஏமாற்றினர். லாரன் வின்பீல்டு–ஹில் (42) நம்பிக்கை தந்தார். அமி ஜோன்ஸ் (28) ஆறுதல் தந்தார். அபாரமாக ஆடிய சோபியா டங்க்ளி (73*), கேத்ரின் புருன்ட் (33*) கைகொடுக்க, இங்கிலாந்து அணி 47.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 225 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் பூணம் யாதவ் 2 விக்கெட் வீழ்த்தினார். இந்திய அணி 0–2 என, தொடரை இழந்தது. மூன்றாவது போட்டி வொர்செஸ்டரில் நாளை நடக்கிறது.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *