Share on Social Media

ஹோவ்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ‘டுவென்டி–20’ போட்டியில் அசத்திய இந்திய பெண்கள் அணி 8 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. ஹோவ் நகரில் 2வது போட்டி நடந்தது. இரு அணிகளிலும் மாற்றம் செய்யப்படவில்லை. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. சோபி எக்லெஸ்டோன் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஷபாலி, கேத்ரின் புருன்ட் வீசிய 4வது ஓவரில் 5 பவுண்டரி விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 70 ரன் சேர்த்த போது மந்தனா (20) அவுட்டானார். அபாரமாக ஆடிய ஷபாலி, 38 பந்தில், ஒரு சிக்சர், 8 பவுண்டரி உட்பட 48 ரன் எடுத்து நம்பிக்கை தந்தார். அடுத்து வந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (31) ஓரளவு கைகொடுத்தார். ரிச்சா கோஷ் (8) நிலைக்கவில்லை.

இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 148 ரன் எடுத்தது. தீப்தி சர்மா (24), ஸ்னே ரானா (8) அவுட்டாகாமல் இருந்தனர்.

பின் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு டாமி பியுமன்ட் (59), கேப்டன் ஹெதர் நைட் (30) நம்பிக்கை தந்தனர். கடைசி ஓவரில் 14 ரன் தேவைப்பட்டது. துல்லியமாக பந்துவீசிய ஸ்னே ரானா, 5 ரன் மட்டுமே வழங்கினார்.

இங்கிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 140 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் பூணம் யாதவ் 2 விக்கெட் வீழ்த்தினார்.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *