மதுரை-”சி.ஏ., (பட்டய கணக்காளர்) படிப்பில் பாடங்களை குறைப்பது, கல்வியாண்டு குறைத்து நேரடி பயிற்சியை ஏற்படுத்துவது போன்ற பல சீர்திருத்தங்களை அரசுக்கு முன் மொழிந்துள்ளோம்” என இந்திய பட்டய கணக்காளர்கள் சங்கத்தின் தேசிய தலைவர் நிகார் ஜம்புகாரியா தெரிவித்தார்.இச்சங்கம் சார்பில் மதுரையில் தணிக்கை வரி குறித்த கருத்தரங்கு நடந்தது. மத்திய குழு உறுப்பினர் ஜி.சேகர், தென்னிந்திய குழு தலைவர் ஜலபதி, முன்னாள் தலைவர் ராஜராஜேஸ்வரன் பங்கேற்றனர். மதுரை கிளை தலைவர் மோகனசுந்தரம் வரவேற்றார்.நிகார் ஜம்புகாரியா பேசியதாவது: இந்திய பட்டய கணக்காளர்கள் சட்டத்திருத்தம் அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெருநிறுவன தணிக்கை சம்பளம், மோசடியில் ஈடுபட்டால் அபராதம் அதிகரிப்பு, சிறை தண்டனை கிடைக்கும். உறுப்பினர் பதவிக்காலம் 3 ஆண்டுகளில் இருந்து 4 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வரி தணிக்கை, வரி விதிப்பில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆன்லைனில் வரி செலுத்தும் முறையை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் இரு பாடங்கள் தேர்ச்சி பெற்றாலே ஆடிட்டர் ஆகிவிடுகின்றனர் என்றார்.ஆடிட்டர்கள் கவுரவ் ஆச்சார்யா, ராமமூர்த்தி, கிரிஷ் அகுஜா உள்ளிட்டோர் பேசினர். செயலாளர் மணிமேகலை நன்றி கூறினார்.
Advertisement