Share on Social Media

புதுடில்லி: இதுவரை 148 இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், வரும் ஜூலை 23ல் ஒலிம்பிக் போட்டி துவங்குகிறது. இதில் பங்கேற்க, இதுவரை 90க்கும் மேற்பட்ட இந்திய நட்சத்திரங்கள் தகுதி பெற்றுள்ளனர். இந்தியாவில், ‘கொரோனா’ தொற்றின் இரண்டாவது அலை பரவுகிறது. இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 148 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐ.ஓ.ஏ.,) சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் 17 பேர் இரண்டு கட்ட தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மீதமுள்ள 131 பேர் முதல் கட்ட தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தவிர, தடுப்பூசி செலுத்தியவர்கள் நிறைய பேர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருப்பதாக ஐ.ஓ.ஏ., தலைவர் நரிந்தர் பத்ரா தெரிவித்துள்ளார்.

இதேபோல, வரும் ஆக. 24ல் டோக்கியோவில் துவங்கவுள்ள ‘பாராலிம்பிக்’ போட்டிக்கு தகுதி பெற்றுள்ள 13 இந்திய நட்சத்திரங்கள், முதற்கட்ட தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இருவர் மட்டும் இரண்டு கட்ட தடுப்பூசி செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை 163 இந்திய நட்சத்திரங்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

 

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *