Share on Social Media

டுனிஸ்: உலக யூத் டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தியா, ஸ்வஸ்திகா ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது. 

டுனிசியாவில் உலக யூத் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் (19 வயதுக்குட்பட்ட) தொடர் நடந்தது. கொரோனாவுக்குப் பின் இந்திய டேபிள் டென்னிஸ் நட்சத்திரங்கள் பங்கேற்ற முதல் தொடர் இது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தியா, ஸ்வஸ்திகா ஜோடி களமிறங்கியது. பைனலில் ரஷ்யாவின் நடாலியா, எலிசபெத் ஜோடியை சந்தித்தது.

முதல் செட்டை 3–11 என இழந்த இந்திய ஜோடி, அடுத்த இரு செட்களையும் 6–11, 7–11 என கோட்டை விட்டது. முடிவில் 0–3 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றது. 

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *