Share on Social Media


புதுடில்லி: இந்திய எல்லைப் பகுதியில் போர்ச்சூழல் நிலவுவதாக, காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மே 5ம் தேதி, பாங்காங் ஏரிப் பகுதியில் இந்திய – சீன ராணுவத்தினர் இடையே மோதல் வெடித்தது. இதில் இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க மத்திய அரசு கையாளும் நடவடிக்கைகளை ராகுல் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இரு தரப்பும் அப்பகுதியில் படைக்குவிப்பை படிப்படியாக அதிகரித்தன. ராணுவம் மற்றும் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைக்குப் பின் கோக்ரா பகுதியில் இருந்து இரு தரப்பும் கடந்த மாதம் படைகளை வாபஸ் பெற்றன. தற்போது பிரச்னைக்குரிய பகுதியில் இரு நாடுகளும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை குவித்துள்ளன.

இந்நிலையில், இந்திய எல்லையை ஒட்டிய பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை சீனா மேம்படுத்தி வருவதாகவும், லடாக், உத்தரகண்ட், அருணாசல் ஆகியவற்றை ஒட்டிய சீன பகுதிகளில், 10 புதிய ராணுவத் தளங்களை சீனா அமைத்து வருவதாகவும், ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்தச் செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், ‘நமது எல்லைப் பகுதிகளில் போர்ச்சூழலை நாம் சந்தித்து வருகிறோம்’ எனப் பதிவிட்டு உள்ளார்.

Advertisement





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *