Share on Social Media


அதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 23 -ல் பல்வேறு மாநிலங்களை 32 எம்.பி.க்கள் இக்குழுவை கலைக்குமாறு குடியரசுத் தலைவருக்கு கூட்டாக வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன், ‘கடும் விமர்சனத்திற்கு உள்ளான அந்த குழு இன்னும் நீடிக்கிறதா? அக்குழு கூடியுள்ளதா? குழு புதிதாக பன்மைத்துவ பிரதிநிதித்துவத்தோடு மாற்றி அமைக்கப்படுமா?” என்று மீண்டும் கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் பதில்

அமைச்சர் பதில்

இதற்கு கடந்த 17 -ம் தேதி மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி அளித்த பதிலில், “இக்குழு 2016-ல் அமைக்கப்பட்டது. கடந்த 2017 ஜனவ‌ரி 3, மே 2 தேதிகளில் 2 முறை கூடியுள்ளது. தற்போது இக் குழுவை மாற்றி அமைக்க முடிவு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது. அவ்வாறு மாற்றி அமைக்கப்படும்போது அதன் உறுப்பினர்கள் பன்மைத்துவத்துடன் அமைவதற்கான அனைத்து ஆலோசனைகளும் கருத்தில் கொள்ளப்படும்” என்று தெ‌ரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக நம்மிடம் பேசிய சு.வெங்கடேசன், “இது 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாக எழுப்பிய குரலுக்கு கிடைத்த வெற்றி. ஆனாலும் அரசின் நோக்கம் குறித்து பரந்த விவாதம் தேவைப்படுகிறது. வரலாற்று திரிபு, பன்மைத்துவம் மீதான தாக்குதல் ஆகியவற்றுக்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்தியா முழுவதுமுள்ள வரலாற்று ஆய்வாளர்களின் கடந்த கால, நிகழ்கால அறிவியல் பூர்வமான பங்களிப்புகள் சிதைந்து விடாமல் பாதுகாக்கப்பட வேண்டும்” என்றார்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *