Share on Social Media

புதுடில்லி: டோக்கியோ ஒலிம்பிக் சீருடை ‘ஸ்பான்சராக’ இருந்த சீன நிறுவனம் விடுவிக்கப்பட்டது.

ஜப்பானின் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 23–ஆக. 8ல் நடக்கவுள்ளது. இதற்கான இந்திய விளையாட்டு நட்சத்திரங்களின் சீருடை ‘ஸ்பான்சராக’ சீனாவின் லி நிங் விளையாட்டு நிறுவனம் இருந்தது. சமீபத்தில் இந்த ‘கிட்’ வெளியிடப்பட்டது. 

ஆனால், கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் வீரமரணம் அடைய, சீன நிறுவனங்களுக்கு கடும் எதிர்ப்பு உள்ளது. இதையடுத்து இந்த ஒப்பந்தத்தை இந்திய ஒலிம்பிக் சங்கம் கைவிட முடிவு செய்தது. புதிய ‘ஸ்பான்சரை’ தேடி வருகிறது. இதுகுறித்து மத்திய விளையாட்டு அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறுகையில்,‘‘இந்திய வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் டோக்கியோ ஒலிம்பிக்கில் அணியும் சீருடையில் எவ்வித ‘ஸ்பான்சர்’ பெயரும் இருக்காது. ‘இந்தியா’ என்று மட்டும் எழுதி இருக்கும்,’’ என்றார். 

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *