Share on Social Media


புதுடில்லி: ‘பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் இஸ்ரேலும், பிரான்சும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்திய அரசு எந்தவிதமான விவாதத்துக்கும் மறுக்கிறது’ என, ப.சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் பதிவிட்டு உள்ளதாவது:
சுதந்திரத்தின் அளவுகோலின்படி சுதந்திரமான ஜனநாயகம் கொண்ட பிரான்ஸ் மற்றும் கடினமான ஜனநாயகம் கொண்ட இஸ்ரேலுக்கு எதிராக தரவரிசைப்படுத்த முடியும்.

latest tamil news

பெகாசஸ் விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் அரசு, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது; தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்துவிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக இஸ்ரேல் அரசு ஒரு விசாரணைக் கமிஷனையும் உருவாக்கியுள்ளது. ஆனால், எந்தவிதமான அதிகாரபூர்வமற்ற கண்காணிப்பும் செய்யவில்லை என, மறுக்கும் இந்திய அரசு, இந்த விவகாரத்தில் விவாதம் நடத்தவும் மறுக்கிறது.
இவ்வாறு அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

Advertisement





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *