Share on Social Media

புதுடில்லி: ‘‘இந்தியாவுக்கு உலக கோப்பை வென்று தர விரும்புகிறேன்,’’ என, சித்தார்த் கவுல் தெரிவித்துள்ளார்.

இந்திய வேகப்பந்துவீச்சாளர் சித்தார்த் கவுல் 31. கடந்த 2018ல் சர்வதேச அரங்கில் காலடி வைத்த இவர், இதுவரை 3 ஒருநாள், 3 ‘டுவென்டி–20’ போட்டிகளில் பங்கேற்றுள்ளார். மலேசியாவில் 2008ல் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐ.சி.சி., உலக கோப்பையில் விளையாடிய இவர், 10 விக்கெட் சாய்த்தார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான பைனலில் கடைசி ஓவரை துல்லியமாக வீசிய இவர், கோஹ்லி தலைமையிலான இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்தார். இதேபோல இந்த ஆண்டு நடக்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பையில் இந்தியாவுக்கு சாம்பியன் பட்டம் வென்று தர விரும்புகிறார்.

இதுகுறித்து சித்தார்த் கவுல் கூறுகையில், ‘‘அடுத்து நடக்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பையில் இந்தியாவுக்கு சாம்பியன் பட்டம் வென்று தருவதே இலக்கு. இது எனது நீண்ட நாள் கனவு. கடந்த 2008ல் ஜூனியர் அணி உலக கோப்பை வெல்ல உதவியது போல, இம்முறையும் சீனியர் அணிக்கு கைகொடுக்க விரும்புகிறேன். அப்போது ஜூனியர் அணிக்கு கேப்டனாக கோஹ்லி இருந்தார். தற்போது இவர், சீனியர் அணிக்கு கேப்டனாக இருப்பது சிறப்பு. கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி திறமையை நிரூபித்தால் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிக்கலாம்,’’ என்றார்.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *