Share on Social Media


புதுடில்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடுவது எப்போது துவங்கும் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியுள்ளதாவது: உலகில் ஏற்கனவே 23 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு விட்டது. சீனா, அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யாவில், கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கிவிட்டது. இந்தியாவில் எத்தனை பேருக்கு போடப்பட்டுள்ளது. எப்போது துவங்குவீர்கள் மோடி அவர்களே என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவில், அவசர கால பயன்பாட்டிற்காக சீரம், பைசர், பாரத் பயோடெக் நிறுவனங்கள் தங்களது மருந்தை அனுமதிக்கும்படி, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் அனுமதி கோரியுள்ளன. இது குறித்து ஆய்வு நடந்து வருகிறது.

Advertisement





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *