Share on Social Media

ஆர்.பி.ஐ சொல்லியிருப்பதுபோல, நாட்டின் பொருளாதார நிலை கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது செப்டம்பர் மாதத்தில் அதிகரித்திருக்கிறது. அதாவது, ஜூலை மாதத்தில் -69 புள்ளிகளாக இருந்த இதன் நிலை, செப்டம்பரில் -57-ஆக அதிகரித்திருக்கிறது. வேலைவாய்ப்பு -68-லிருந்து -58-ஆகவும், வருமானம் -59-லிருந்து -48-ஆகவும், நுகர்வு 31-லிருந்து 42-ஆகவும் அதிகரித்திருக்கிறது.

வாடிக்கையாளரின் நம்பிக்கைக் குறியீடு (Consumer confidence Index) 49-லிருந்து 58-ஆக அதிகரித்திருக்கிறது. அதே போல, எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்புக் குறியீடு (Future expectations Index )104-லிருந்து 107-ஆக அதிகரித்துள்ளது. இந்தக் குறியீடு 100-க்குமேல் இருப்பது, மக்கள் நல்ல நம்பிக்கையுடன் இருப்பதைக் காட்டுவதாகும்.

பொருளாதாரம்

பொருளாதாரம்

பொருளாதார நடவடிக்கைகள் சிறப்பாகவும், சீராகவும் இருப்பதால், நடப்பு 2021 – 22 நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 9.5 சதவிகிதமாக இருக்கும் என ஆர்.பி.ஐ கணித்துள்ளது. 2022-23-ம் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 17.2 சதவிகிதமாக இருக்கும் என்றும் ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *