Share on Social Media


லைகா- ஷங்கர் இடையேயான பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டதால் அடுத்த மாத இறுதியில் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு துவங்கும் என பேச்சு கிளம்பியிருக்கிறது. கடந்த ஆண்டு சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடந்த படப்பிடிப்புக்கான செட் வேலைகளின்போது கிரேன் விபத்து ஏற்பட்டது. உயிரிழப்பு ஏற்பட்டதினால் படப்பிடிப்பு வேலைகள் பாதிக்கப்பட்டன. அந்த பட வேலைகளை அப்படியே விட்டுவிட்டு கமலும், ஷங்கரும் தங்களின் அடுத்த படங்களில் பிசியாகினர்.

தெலுங்கில் ஷங்கர் இயக்கி வரும் ராம்சரண் படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளது. கமல் நடித்து வரும் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பும் இன்னும் இரண்டு ஷெட்யூல் ஷூட்டிங் தான் இருக்கிறது. எனவே, ‘இந்தியன்2’ ஜனவரில் படப்பிடிப்புக்கு கிளம்புகிறார்கள். ஈவிபியில் ஏற்கெனவே அமைக்கப்பட்ட செட்டுக்கள் இந்த மழையிலும் பாதிக்கப்படாமல் உள்ளனவாம். ரீடச் வேலைகள் செய்தால், செட் மீண்டும் புதுப்பொலிவுகள் ஆகிவிடும். எனவே படப்பிடிப்பு அங்கேதான் நடக்கவிருக்கிறது.

இந்தியன் 2

காஜல் அகர்வால், இப்போது கர்ப்பமாக இருப்பதால் சில மாதங்களுக்கு படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டாம் என அவரது மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். அதை தயாரிப்பு தரப்பிற்கும் தெரியப்படுத்தி விட்டார் காஜல். எனவே அவருக்கு பதிலாக த்ரிஷா நடிக்க விருப்பதாக பேச்சு கிளம்பியுள்ளது. ஏற்கெனவே கமலின் ‘தூங்கா வனம்’, ‘மன்மதன் அம்பு’ ஆகிய படங்களில் த்ரிஷா நடித்துள்ளதால் மூன்றாவது முறையாக கமலுடன் நடிப்பார் என்கிறார்கள். ஆனால், தயாரிப்பு தரப்போ காஜலுக்கு பதில் யார் என்பது இன்னும் உறுதியாகவில்லை என்கிறது. பேச்சு வார்த்தைகள்தான் போய்க்கொண்டிருக்கிறது என்கிறது.

ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத்சிங்கின் போர்ஷன்கள் இன்னும் படமாக்காமல் உள்ளதாம். ‘படப்பிடிப்பு எப்போது என்றாலும் உடனே புறப்பட்டு வருகிறேன்’ என ரகுல் ரெடியாகி நிற்கிறார். இதுவரை 80 சதவிகித படப்பிடிப்புகள் நடந்து முடிந்திருப்பதால், இன்னும் படமாக்க வேண்டியது கொஞ்சம் தான் என்றும், எனவே ஒரே மூச்சாக ஷூட்டிங் கிளம்பி, படத்தை முடித்துவிடுவார்கள் என்றும் சொல்கிறார்கள். படத்தில் நடித்த விவேக், நெடுமுடிவேணு இருவரும் இப்போது இல்லை என்பதால், அவர்களது போர்ஷன்களுகாக ஸ்கிரிப்ட்டில் சில மாற்றங்களை செய்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர் படக்குழுவினர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *