Share on Social Media

நேற்று நள்ளிரவு நடைபெற்ற யூரோ கோப்பை 2020 இறுதிப்போட்டியில் இத்தாலியிடம் தோல்வியடைந்தது இங்கிலாந்து. லண்டன் வெம்ப்ளி மைதானத்தில் ஆயிரக்கணக்கான இங்கிலாந்து ரசிகர்கள் முன் நடந்த இந்தத்தோல்விக்கு இத்தாலி ரசிகர்களையும், இங்கிலாந்து அணியில் விளையாடும் வெளிநாட்டு வீரர்களையும் தாக்கத்தொடங்கியிருக்கிறார்கள் சில இனவெறிகொண்ட இங்கிலாந்து ரசிகர்கள்.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ‘’இனவெறித் தாக்குதல்களை பொறுத்துக்கொள்ள முடியாது’’ எனக் கண்டித்தும் லட்சணக்கணக்கான இனவெறி ட்வீட்கள் தொடர்ந்து எழுதப்பட்டு வருகின்றன.

நேற்றைய இறுதிப்போட்டியில் இங்கிலாந்து, இத்தாலி அணிகள் தலா ஒரு கோல் அடிக்க ஆட்டம் டை ஆனது. இதனால் வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்ட்டி ஷூட் அவுட் முறை அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்துக்காக பெனால்ட்டி ஷூட் அவுட் செய்த 5 வீரர்களில் மூன்று வீரர்கள் வேறு இனப் பின்னணி கொண்டவர்கள்.

ஹேரி கேன், ஹேரி மேகுவர் இருவரும் கோல் அடித்துவிட, மார்க்கஸ் ராஷ்ஃபோர்டு, ஜேடன் சாஞ்சோ, புக்காயோ சாகோ மூவரும் கோல் அடிக்கவில்லை. ”வந்தேறிகளால்தான் இங்கிலாந்து தோற்றது” என இந்த வீரர்களின் நிறம் மற்றும் பிறப்பிடும் குறித்து கடுமையான விமர்சனங்களை செய்துவருகிறார்கள் சில இங்கிலாந்து ரசிகர்கள்.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *