Share on Social Media

புதுடில்லி: டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகவும், பயணக்கட்டுப்பாட்டை தவிர்க்கவும் இந்தியாவின் மேரி கோம் இத்தாலி செல்ல உள்ளார்.

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் 38. ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இவர், லண்டன் ஒலிம்பிக்கில் (2012) வெண்கலம் கைப்பற்றினார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இவர், புனேயில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்தியாவில் இருந்து டோக்கியோவுக்கு வரும் விளையாட்டு நட்சத்திரங்கள், பயிற்சியாளர்களுக்கு கடுமையான நிபந்தனைகளை ஜப்பான் அரசு விதித்துள்ளது. இந்தியாவில் இருந்து வருபவர்கள், தினமும் ‘கொரோனா’பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். வேறு யாருடனும் தொடர்பில் இருக்கக் கூடாது என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனை தவிர்க்க மேரி கோம், இத்தாலி சென்று பயிற்சியில் ஈடுபட முடிவு செய்துள்ளார். இதற்காக இவர், இன்று அல்லது நாளை இத்தாலி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள 8 இந்திய குத்துச்சண்டை நட்சத்திரங்கள் இத்தாலியில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் மேரி கோம் இணைந்து பயிற்சி மேற்கொள்வார். பின் அங்கிருந்தபடியே டோக்கியோவுக்கு செல்லவுள்ளனர்.

இதுகுறித்து மேரி கோம் கூறுகையில், ‘‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான எனது பயிற்சி திட்டத்தை மாற்றியுள்ளேன். டில்லி சென்று அங்கிருந்து இத்தாலி செல்ல முடிவு செய்துள்ளேன். இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனை தவிர்க்க இம்முடிவை எடுத்துள்ளேன். நீண்ட நாட்கள் பயிற்சி மேற்கொண்ட பின், இதுபோன்ற நிபந்தனைகளால் எனது செயல்பாட்டுக்கு எவ்வித பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்,’’ என்றார்.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *