Share on Social Media


திருப்பூர்:ஒவ்வொரு மாவட்டத்தையும் ஏற்றுமதி தளமாக மாற்றுவதுதான் பிரதமர் மோடியின் லட்சிய கனவு என, டி.ஜி.எப்.டி., இணை இயக்குனர் ஸ்ரீதர் பேசினார்.

வெளிநாட்டு வர்த்தகத்துறை இயக்குனரகம், திருப்பூர் மாவட்ட தொழில் மையம் சார்பில், ஏற்றுமதியாளர் சங்கம் மற்றும் 75வது சுதந்திர தின அமுத பெருவிழா நிகழ்ச்சி, அவிநாசி அருகே ஐ.கே.எப்., வளாகத்தில் நேற்று நடந்தது. அமைச்சர் சாமிநாதன், கண்காட்சி அரங்கை திறந்து வைத்தார்.ஏ.டி.டி.சி., (அப்பேரல் டிரெய்னிங் அன்டு டிசைன் சென்டர்) சார்பில், செயற்கை இழையில் தயாரித்த மதிப்பு கூட்டு துணி, ஆடை ரகங்கள் வைக்கப்பட்டது.
டி.ஜி.எப்.டி., – ஏற்றுமதியாளர் சங்க அரங்குகளில், ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கும் சேவைகள் குறித்து விளக்கும் பதாகைகள் இடம்பெற்றன.தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் வினீத் தலைமைவகித்தார். தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் கண்ணன் வரவேற்றார். கனரா வங்கி முதன்மை பொதுமேலாளர் பழனிசாமி வாழ்த்தி பேசினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *