Share on Social Media

உலக அளவில் மனிதர்களின் இறப்புகளுக்கு முதல் காரணமாக இருப்பது இதய ரத்தநாள நோய்கள்தாம். ஆண்டுதோறும் சுமார் 1.79 கோடி பேர் இந்நோயால் உயிரிழக்கிறார்கள். இதில் மூன்றில் ஒருவர் 70 வயதுக்குட்பட்டவர்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம். மேலும் பெருந்தொற்றுக் காலத்தில் இதயநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Heart

Also Read: உடல் பருமன், சர்க்கரை நோய், இதய நோய்கள்… நொறுக்குத்தீனி பிரியர்களுக்கு ஓர் அலெர்ட்!

2016-ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் இதயம் மற்றும் ரத்தநாள நோய்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கயானது, உலக அளவிலான இதய ரத்தநாள நோய்களால் ஏற்பட்ட இறப்புகளில் இது 31 சதவிகிதம். இதயநோய்களுக்கு வாழ்க்கை முறை மாற்றங்களால் ஏற்படும் சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற பிரச்னைகள் முக்கிய காரணங்களாக அமைகின்றன.

இந்நிலையில் இதயத்தின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். இதய ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அவள் விகடன் மற்றும் தஞ்சாவூர் அனு மருத்துவமனை இணைந்து உங்கள் இதயம் நலமா?’ என்ற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சியை நடத்துகின்றன.

doctor Tamil News Spot
Cardiologist R.V.Shivakumar

ஆன்லைனில் நாளை (ஜூலை 24 – சனிக்கிழமை) மாலை 6 முதல் 7 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறும். அனு மருத்துவமனையின் மருத்துவ இயக்குநரும் அனுபவம் வாய்ந்த இதய மருத்துவருமான ஆர்.வி. சிவக்குமார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கவுள்ளார்.

இதயநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி, ஒருமுறை இதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் பாதிப்பு ஏற்படாமல் தங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது எப்படி, பெண்களும் இதயநோய்களும் உள்ளிட்டப் பல்வேறு விஷயங்கள் குறித்து நிகழ்ச்சியில் ஆலோசனைகள் வழங்கப்படும்.

WhatsApp Image 2021 07 13 at 12 54 29 Tamil News Spot
உங்கள் இதயம் நலமா?

Also Read: இந்தியாவில் 100-ல் நான்கு பேருக்கு இதய நோய்! – தடுக்க, பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்! #SaveYourHeart

நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களின் தனிப்பட்ட கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் மருத்துவர் பதிலளிப்பார். கட்டணமில்லா இந்தக் கருத்தரங்கில் பங்கேற்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *