Share on Social Media

பிரான்ஸ் கால்பந்து ஜாம்பவான் தியரி ஹென்றிக்கு இப்போதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரீமியர் லீகில் கோலோச்சிக்கொண்டிருந்தவர் அவர். ஆர்செனல் அணியில் அவர் ஆடியபோது ஒட்டுமொத்த கால்பந்து உலகமும் அவர் ஆட்டத்துக்கு அடிமையாக இருந்தது. தன் டச்களால், ஃபினிஷ்களால் அனைவரையும் மெய்மறக்கச் செய்யும் வித்தகர் அவர். ஆர்செனல், பார்சிலோனா, யுவன்டஸ் போன்ற முன்னணி அணிகளுக்காக விளையாடியவர் 350-க்கும் மேற்பட்ட கோல்கள் அடித்திருக்கிறார்.

Thierry Henry

ஒரு வீரராகத் தன் கரியர் முடிந்ததும், மேனேஜராக கால்பந்து அரங்கில் தொடர நினைத்தார் அவர். ஆர்செனல் யூத் அணியில் தொடங்கிய அவர், அடுத்து பெல்ஜியம் அணியின் துணைப் பயிற்சியாளரானார். 2018-ம் ஆண்டு தன் முன்னாள் அணியான மொனாகோவின் பயிற்சியாளராகப் பதவியேற்றார். ஆனால், அவரால் அங்கு சிறப்பான முடிவுகளை ஈட்ட முடியவில்லை. அதன்பிறகு அமெரிக்காவின் மேஜர் லீக் சாக்கர் அணியான மான்ட்ரியல் இம்பாக்ட் பயிற்சியாளரானார். தன் குழந்தைகளோடு நேரம் செலவிட முடியவில்லையென அந்தப் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டார். இப்போது மீண்டும் பெல்ஜியம் தேசிய அணியின் துணை பயிற்சியாளர் ஆகியிருக்கிறார்.

யூரோ 2020 தொடரில் விளையாடிவருகிறது பெல்ஜியம். பயிற்சியின்போது பெல்ஜியம் வீரர்களை மிரளவைத்திருக்கிறார். அவர் தன் இடது காலால் அடித்த டைரக்ட் ஃப்ரீ கிக் சமூக வலைதளங்களில் டிரெண்டாகிக்கொண்டிருக்கிறது. ரசிகர்கள் மட்டுமல்ல, அந்த வீடியோவில் பெல்ஜியம் வீரர்களுமே கூட ஹென்றியைப் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

“அரை மணி நேரமாக பிராக்டீஸ் செய்துகொண்டிருக்கிறோம். ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால், அவர் ஒரே ஷாட்டில் நம்மையெல்லாம் கொன்றுவிட்டார். அதுவும் அவரது இடது காலில்” என்று சக வீரர்களிடம் ஹென்றியைப் புகழ்ந்தார் மிட்ஃபீல்ட் மேஸ்ட்ரோ எனக் கொண்டாடப்படும் கெவின் டி புருய்னா. அவர் மட்டுமல்ல, ஹென்றியின் அந்த இடது கால் ஃப்ரீ கிக்கை ஒவ்வொரு ரசிகர்களும் புகழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *