Share on Social Media

கொரோனா இரண்டாம் அலையில், நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களில் பெரும்பாலானோருக்கு ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவது நிகழ்கிறது. அவர்கள் அனைவருக்கும் ஆக்சிஜன் அளிக்க முடியாமல், மருத்துவமனைகள் திணறுகின்றன. இதனால் உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. எனவே, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள், ஆக்சிஜன் வசதியுடன்கூடிய படுக்கைகளை அதிகரிப்பது, ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பது, ஆக்சிஜனை மருத்துவமனைகளுக்குத் தடையின்றி கிடைக்கச் செய்வது ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகின்றன.

ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 4,000 நோயாளிகளை, மருத்துவமனையில் சேரும் நோய்நிலைக்குச் செல்லாமல் தடுத்து, ஆக்சிஜன் தேவையில்லாமல் சிகிச்சையளித்து, புறநோயாளி சிகிச்சை மூலமாகவே கொரோனாவிலிருந்து மீட்டுள்ளார் தென்னாப்பிரிக்காவைச் சார்ந்த மருத்துவரான சங்கர செட்டி. இவர் அளிக்கும் சிகிச்சையை, `எட்டாம் நாள் சிகிச்சை’ என்று அழைக்கின்றனர்.

டாக்டர் சங்கர செட்டி

ஒரு மருத்துவர், இரண்டு செவிலியர்கள்… 4,000 நோயாளிகள்!

தென்னாப்பிரிக்காவில் உள்ள போர்ட் எட்வர்டு, சுற்றுலாவுக்குப் புகழ்பெற்ற ஒரு சிறிய கடற்கரை நகரம். இங்குதான் டாக்டர் சங்கர செட்டியின் கொரோனா சிகிக்சை மையம் உள்ளது. சிகிக்சை மையம் என்றால், கிளினிக், பெரிய ஹாஸ்பிட்டல் என்றெல்லாம் நினைத்துவிடாதீர்கள். அவருடைய வீட்டின் கார் பார்க்கிங்கில் உள்ள இரண்டு கூடாரங்களைத்தான், அவர் கொரோனா சிகிக்சை மையமாகப் பயன்படுத்துகிறார். உதவிக்கு இரண்டு செவிலியர்கள். இந்த மூவர் படைதான் 4,000 பேரை கொரோனாவிலிருந்து மீட்டுள்ளது.

டாக்டர் சங்கர செட்டி அப்படி என்னதான் சிகிச்சையளிக்கிறார் என்று தெரிந்துகொள்ளும் முன், அவரைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தைப் பார்த்துவிடுவோம். தென்னாப்பிரிக்காவில் மரபியல், உயர் உயிரியல் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டமும், உயிரி வேதியியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆகியவற்றில் முதுகலைப் பட்டமும் பெற்றவர் டாக்டர் சங்கர செட்டி. பின்னர் கர்நாடகத்தின் மைசூரில் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் பட்டம் பெற்றார். தொடர்ந்து, போர்ட் எர்வர்டு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக ஒரு வருடமும், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவமனையில் மருத்துவராக இரண்டு வருடங்களுக்கு மேலும் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து, போர்ட் எர்வர்டிலேயே தனியாக சிகிச்சையளிக்கத் தொடங்கியுள்ளார். ஏறத்தாழ கடந்த 20 வருடங்களாகக் குடும்பநல மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்.

சரி, கொரோனா நோயாளிகளுக்கு அவர் என்ன சிகிச்சையளிக்கிறார்? கொரோனா சிகிச்சையில் அவருடைய அணுகுமுறை என்ன?

`நாள் கணக்கு’ சிகிச்சை!

மருத்துவர் என்பதைத் தாண்டி, மரபியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆகியவற்றில் பயிற்சி பெற்றவர் என்பதால், ஆரம்பத்திலிருந்தே கொரோனா தொற்று பற்றிய பார்வை டாக்டர் சங்கர செட்டிக்கு வேறு விதமாக இருந்தது. கொரோனா தொற்று ஒரு நபருக்கு ஏற்படும் நாளிலிருந்து, நோய் உடலில் எவ்வாறு வளர்ச்சியடைகிறது, என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதிலேயே அவர் அதிக கவனம் செலுத்தினார். குறிப்பாக, திடீரென்று ஆக்சிஜன் அளவு குறைவதில் அவருடைய கவனம் குவிந்தது.

கடந்த மார்ச் 2020-ல், தென்னாப்பிரிக்காவில் முதல் கொரோனா தொற்று பதிவானதுமே, அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். குடும்பத்திடமும் சமூகத்திடமும் பழகுவதைக் குறைத்தார். சுவாசமண்டலத்தைத் தாக்கும் வைரஸை எதிர்கொள்ள சூரிய ஒளி, காற்றோட்டம் ஆகியவை அவசியம் என்ற புரிந்துணர்வுடன், நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க தன் கார் பார்க்கிங்கில் கூடாரங்களை அமைத்தார். மேலும், நோயாளிகளைத் தொடக் கூடாது, நோயாளிகளுக்கிடையில் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் போன்ற அடிப்படைப் புரிந்துணர்வுடன், இரட்டை முகக்கவசம், வைசர், சானிடைசர், கோட் ஆகியவற்றைப் பயன்படுத்தினார். முழுமையான பிபிஇ உபகரணத்தை ஒருபோதும் அவர் பயன்படுத்தவில்லை.

AP21025563714208 Tamil News Spot
Mask

தன்னிடம் வந்த நோயாளிகளை அறிகுறிகளை வைத்தே கொரோனா தொற்று உள்ளவர்கள், சந்தேகத்துக்கிடமானவர்கள், கொரோனா தொற்று இல்லாதவர்கள் எனப் பிரித்து தனித்தனியே சிகிச்சையளித்தார் டாக்டர் சங்கர செட்டி. ஒவ்வொரு கொரோனா நோயாளியிடமும், சரியாக எந்த நாளில் அவருக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் வெளித்தெரிய ஆரம்பித்தது என்பது குறித்து விசாரித்தார். அவர்களுக்கு மருந்து கொடுத்து அனுப்பினாலும், ஒவ்வொரு நாளும் அந்த நோயாளிகளின் உடல்நலன் குறித்துத் தகவலைக் கேட்டறிந்தார். இப்படித் தொடர்ச்சியாக கண்காணித்ததில், அவருக்கு ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது.
அதாவது, கொரோனா தொற்று முதல் 7 நாள்களில் ஒரு விதமாகவும், 8-ம் நாள் முதல் வேறு விதமாகவும் இரண்டு நிலைகளில் செயல்படுகிறது என்பதுதான் அது.

அதாவது, கொரோனா நோய்த்தொற்று, அறிகுறிகள் வெளித்தெரிய ஆரம்பித்த 1 – 7 நாள்களில் சுவாசமண்டல வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளுடனும், சரியாக 8வது நாள் முதல் அலர்ஜிக்கான அறிகுறிகளுடனும் காணப்படுகிறது என்று அவர் கண்டறிந்தார். எனவே, முதல் 7 நாள்கள் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளுக்கு மருந்துகளை அளித்தார். 8-ம் நாள் முதல், அடுத்து வரும் நாள்களுக்கு அலர்ஜிக்கான மருந்துகளைக் கொடுத்து தீவிர சிகிச்சையளித்தார். இதை அறிவியல்ரீதியாக `டைப் 1 ஹைப்பர்சென்சிவிட்டி’ என்று அவர் வகைப்படுத்துகிறார். அதாவது, குறிப்பிட்ட அலர்ஜி காரணிக்கு எதிராக உடல் ஆற்றும் எதிர்வினை.

ஆக்சிஜன் அளவு குறைவதை எப்படித் தடுத்தார்?

கொரானா இரண்டாம் அலையைப் பொறுத்தவரையில், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு திடீரென்று குறைவது மிக முக்கியமான அறிகுறியாக உள்ளது. மேலும், படுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுமளவுக்கு உடல் சோர்ந்து போதல், உடல் வலி, மூட்டுவலி மற்றும் எரிச்சல் போன்றவற்றையும் டாக்டர் சங்கரா, 8-ம் நாளிலிருந்து தன்னுடைய நோயாளிகளிடம் கண்டறிந்துள்ளார். உடலில் நடக்கும் இந்த மாற்றங்களை 6-ம் நாள் முதல் 9-ம் நாள் வரையில் சி.ஆர்.பி (C-reactive protein), Interleukin 6 உள்ளிட்ட ரத்தப் பரிசோதனைகள் செய்வதன் மூலம் உறுதிபடுத்திக் கொண்டுள்ளார்.

எனவே, 8-ம் நாளிலிருந்து காட்டிகோஸ்டீராய்டு மற்றும் ஆண்ட்டிஹிஸ்டமின் வகை (Corticosteroids & Antihistamines) மருந்துகளை நோயாளிகளின் உடல்நிலைக்கு ஏற்றவாறு தீவிரமாகப் பயன்படுத்தியுள்ளார். இதன் மூலம் சில மணி நேரங்களிலிருந்து ஒரு சில நாள்களுக்குள் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு அதிகரித்து இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.

நோய்த்தொற்று அறிகுறிகள் வெளிப்பட ஆரம்பித்த நாளில் இருந்து 8-ம் நாள் என்று கணக்கு வைத்துக்கொண்டு, அந்த 8-ம் நாளிலிருந்து இந்த சிகிக்சையைத் தீவிரமாக அளிக்கவில்லையெனில், அது நாள்பட்ட கொரோனாவாகவோ, `சைட்டோகின் புயல் (Cytokine Storm)’ எனப்படும் ஒருவகைப் புரதப் பொருள் உற்பத்தி அதிகரித்து, முக்கிய உறுப்புகள் செயலிழக்கும் நிலையோ, மரணமோகூட ஏற்படலாம் என்று அவர் கருதுகிறார்.

AP20178343450518 Tamil News Spot
Oxygen Level

8-ம் நாள் சிகிச்சை!

ஞாயிற்றுக்கிழமைகளில் டாக்டர் சங்கர செட்டி விடுப்பு எடுத்துக் கொள்வதால், இந்த 8-ம் நாளின் முக்கியத்துவம் குறித்து தன்னுடைய நோயாளிகளுக்கு அறிவுறுத்தி, மருந்துகளையும் முன்னரே எழுதிக் கொடுக்கிறார். எனவே, நோயாளிகளும் தங்களுக்கு 8-ம் நாள் குறைந்த அளவு அறிகுறிகள் இருந்தாலும், மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். அந்தப் பகுதியிலுள்ள படிப்பறிவில்லாத மக்கள்கூட, 8-ம் நாள் சிகிச்சையின் முக்கியத்துவத்தை அறிந்துள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.

டாக்டர் சங்கர செட்டியின் நோயாளிகள் பெரும்பாலும் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களாகவும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாகவும் இருப்பதால், பெரும்பாலும் தேவையில்லாமல் பரிசோதனைகளை அவர் எடுக்கச் சொல்வதில்லை. கொரோனா நோயின் அறிகுறிகளைக் கொண்டே அவர் பலருக்கு சிகிச்சையளித்துள்ளார். ஆக்சிஜன் வசதியில்லாமல், அவரிடம் சிகிக்சை பெற்ற நோயாளிகள் அனைவருமே உயிரிழப்பின்றி, நாள்பட்ட கொரோனா அறிகுறிகள் ஏதுமின்றி குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரானாவைக் கண்டறிய அதிகம் பயன்படுத்தப்படும் ஸ்வாப் பரிசோதனை எனப்படும் பிசிஆர் பரிசோதனைகள் நம்பகத்தன்மை குறைந்தவை என்றும், ஆன்ட்டிபாடி பரிசோதனைகள் அதிகம் பலனளிக்கக் கூடியவை என்றும் அவர் கருதுகிறார். மேலும், ஹைப்பர்சென்சிட்டிவிட்டி உள்ளவர்களுக்கே கொரோனா தடுப்பூசி பலனளிக்கும் என்றும், எல்லோருக்கும் தடுப்பூசி பாதுகாப்பானது அல்ல என்றும், தேவையில்லாதது என்றும் அவர் கருதுகிறார். இந்த முடிவுகளை மாடர்ன் மெடிசன் என்ற இதழிலும் (MODERN MEDICINE, ISSUE 5, 2020) அவர் பதிவு செய்துள்ளார்.

தடுப்பூசி பற்றி டாக்டர் சங்கர செட்டி, `பூட்டில், சாவி எப்படி நுழைகிறதோ அப்படி கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதங்கள் நம் செல்களில் நுழைந்து, அவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு பெருகுகின்றன. நமக்கு ஸ்பைக் புரதங்கள் அலர்ஜியை உண்டு செய்கின்றன. தற்போதுள்ள தடுப்பூசிகள் மிகக்குறிப்பிட்ட காரணத்துக்கானவை என்பதால், அவை பலனுள்ளவையாக இருக்க வாய்ப்புக் குறைவு. மேலும், அவை ஸ்பைக் புரதங்களை உருவாக்குவதால், தீவிரமான குறுகிய மற்றும் நீண்டகால விளைவுகளை உருவாக்கலாம். அவற்றால் பெறப்படும் நோய் சகிப்புத் தன்மை முழுமையானதல்ல’ என்பதை தன் கருத்தாக முன்வைக்கிறார்.

corona virus vaccination Tamil News Spot
கொரோனா தடுப்பூசி

இந்தியா குறித்துப் பேசும்போது, `எட்டாம் நாளுக்குப் பிறகு வைரஸை அழிப்பதில் காலத்தை வீணாக்கக் கூடாது, அதனால் பலனில்லை. இந்தியாவில் பெரும்பாலான நோயாளிகள், ஹைப்பர்சென்சிட்டிவிட்டி நிலையில்தான் மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு உடனடியாக ஸ்டீராய்டுகள் மற்றும் ஆன்ட்டிஹிஸ்டமின் ஆகியவற்றை தீவிரமாக (வழக்கமாக அளிக்கப்படும் அளவுக்கு அதிகமான அளவில்) அளிப்பதன் மூலம் ஆக்ஸிஜன் உதவியின்றி அவர்களைக் காப்பாற்ற முடியும். இதன் மூலம் மருத்துவமனைகளின் சுமை குறையும். குறைந்தது பிரச்னைகளை எதிர்கொள்ள கூடுதல் நேரமாவது கிடைக்கும்’ என்றும் டாக்டர் சங்கர செட்டி அறிவுறுத்துகிறார்.

பிரச்னையின் தன்மை புரிந்தால்தான், தீர்வின் திசை புரியும் என்பார்கள். டாக்டர் சங்கர செட்டியிடம் கலந்தாலோசித்து, தங்கள் அணுகுமுறையில் தேவைப்படும் மாற்றங்களைச் செய்யுமா மத்திய, மாநில அரசுகள்?

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *