Share on Social Media


மதுரை : மதுரையில் ஆளும் கட்சி நிர்வாகிகள் கை காட்டும் நபர்களுக்கே ஆவின் டெப்போக்கள் மாற்றும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளதாக முகவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்..
ஆவின் பால் பாக்கெட்டுகள், தயிர் விற்பனை செய்ய நகரில் 1020க்கும் மேற்பட்ட சிறிய வகை டெப்போக்கள் உள்ளன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 1.80 லட்சம் லிட்., பால் பாக்கெட்டுகள் விற்கப்படுகின்றன.

இதை நடத்தும் 80 சதவீதம் முகவர்கள் பல ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள். லாபமான முறையில் இயங்கி வரும் 50க்கும் மேற்பட்ட டெப்போக்களை ஆளுங்கட்சியினருக்கு மாற்ற விண்ணப்பங்கள் அளித்துள்ளது சர்ச்சை எழுந்துள்ளது.

முகவர்கள் கூறியதாவது:அதிக எண்ணிக்கையில் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யும் டெப்போக்களை குறிவைத்து ஆளும் கட்சி நிர்வாகிகள் சிலருக்கு மாற்றி விடும் வேலையில் இறங்கியுள்ளனர்.

இதற்கு அதிகாரிகள் சிலரும் துணைபோகின்றனர். அவர்கள் வேண்டுமென்றே ‘குறிப்பிட்ட டெப்போக்களில் சரியாக விற்பனை இல்லை. நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதை வேறு ஒருவருக்கு மாற்றினால் விற்பனையை அதிகரிக்கலாம்’ என பொய்யாக சிபாரிசு செய்யும் பணியை துவங்கியுள்ளனர்.

டெப்போக்கள் மாற்றம் குறித்து பொது மேலாளர் சாந்தி முழுமையான விசாரணை நடத்திய பின் முடிவு எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *