Share on Social Media


ஆற்காடு : ஆற்காடு அருகே 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாமை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதல் மற்றும் 2ம் கட்ட  தடுப்பூசிகள் போடப்படுகிறது. மேலும், 18 வயது முதல் 45  வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் கடந்த 25ம் தேதி துவங்கியது. இந்நிலையில் ஆற்காடு, வாலாஜா, கலவை, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய 5 அரசு மருத்துவமனைகளிலும், புதுப்பாடி உள்ளிட்ட 7 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 29 ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் தற்போது நடைபெற்று வருகிறது.

திமிரி அடுத்த பாளையம் கிராமத்தில் நடைபெற்ற கொரோனா  தடுப்பூசி முகாமை  கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும்  கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களிடம்  கேட்டுக்கொண்டார். மேலும், அப்பகுதியில் நடைபெற்று வரும் கொரோனா கணக்கெடுப்பு பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து, அருங்குன்றம், மேல்புதுப்பாக்கம் ஆகிய கிராமங்களில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி முகாம்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார். கொரோனா கணக்கெடுப்பு பணிகளையும்  ஆய்வு செய்தார். இதில், ஆற்காடு தாசில்தார் காமாட்சி, கலவை தாசில்தார் நடராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய, வருவாய் ஆய்வாளர் சுரேஷ், விஏஓக்கள் சக்கரவர்த்தி, தசரதன், வட்டார மருத்துவ அலுவலர்கள் சரவணன், சுரேஷ் பாபுராஜ், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதேபோல், மாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் மணிமாறன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, நேர்முக உதவியாளர் பிரேம் ஆனந்த்,  சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணி உடனிருந்தனர்.

நெமிலி: பனப்பாக்கம் பேரூராட்சியில் வணிகர் வளாகத்தில் நேற்று 18 வயது முதல் 44 வயது உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாம் புன்னை ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ரதி, பேரூராட்சி செயல் அலுவலர் அர்ச்சுனன், வணிகர் சங்கம் மாவட்ட செய்தி தொடர்பாளர் சுபாஷ் ஆகியோர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதேபோல், நெமிலி பேரூராட்சியில் செயல் அலுவலர் மனோகரன் தலைமையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தடுப்பூசி போடும் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.பாணாவரம்: பாணாவரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை சப்-கலெக்டர் இளம்பகவத் நேற்று  ஆய்வு செய்தார்.கலவை: கலவை அடுத்த சொரையூர் கிராமத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி போடும் முகாமை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு ெசய்தார்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *