Share on Social Media


மொழி வழி மாநிலங்கள் மக்களின் உரிமை குரல்களை வலிமைப்படுத்தும் என்பதால், ஆர்.எஸ்.எஸ்., பரிவாரம் அதை விரும்புவதில்லை. அவற்றை உடைத்து பலவீனமாக்கி, பல மொழி பேசும் சிறு பிரதேசங்கள், மத்தியில் ஒற்றை ஆட்சி என்பது தான், பா.ஜ.,வை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தம்.
– மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன்

‘ஆர்.எஸ்.எஸ்., பற்றி நன்கு அறிந்துள்ளீர்களே; ஷாகா சென்றுள்ளீர்களா…’ எனக் கிண்டலாக கேட்க தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை.

சி.பி.எஸ்.இ., தேர்வை நடத்துவது, கொரோனா நோய் தொற்று காலத்தில் மாணவ — -மாணவியருக்கு ஆபத்து என்று ரத்து செய்த மத்திய அரசு, நீட் தேர்வை அவசரமாக நடத்துவதின் மர்மம் என்ன? நீட் தேர்வுக்கு பாடம் நடத்தும் கோச்சிங் சென்டர்களின் மொத்த வியாபாரம், 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல்!
– தமிழக சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ்

‘நீங்கள் இப்படி கேட்பீர்கள் என தெரிந்திருந்ததால் தான், நிறைய பிள்ளைகள் கோச்சிங் இல்லாமலேயே தேர்வை எதிர்கொள்கின்றன…’ எனக் காட்டமாக கூறத் தோன்றும் வகையில், தமிழக சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை.

தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்யும் பா.ஜ.,விற்கு, நீட் விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம் சரியான சாட்டையடி கொடுத்துள்ளது; இது தமிழ்நாடு. ஒருபோதும் பா.ஜ.,வின் கனவு நனவாகாது.’அப்பாவி மாணவர்கள்.
– தமிழக காங்., – எம்.பி., ஜோதிமணி

‘சாட்டையடி இருக்கட்டும். நீட் தேர்வு இந்த ஆண்டு உண்டு. அதற்கு காங்.,கின் நிலைப்பாடு என்ன…’ எனக் கேட்க தோன்றும் வகையில், தமிழக காங்., – எம்.பி., ஜோதிமணி அறிக்கை.

நீட் தேர்வு குழப்பத்தால் பெற்றோர், மாணவர் குழப்பம் அடைந்துள்ளனர். அதற்காக வருந்துகிறேன் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதற்கு ஏன் முதல்வர் வருந்தணும்… உங்கள் வார்த்தையை உண்மை என நம்பி ஓட்டு போட்ட மக்கள் தான் வருந்தணும்!
– தமிழக பா.ஜ., பொதுச் செயலர் ராகவன்

பாவம் சும்மா விடாது…’ எனக் கூறத் துாண்டும் வகையில், தமிழக பா.ஜ., பொதுச் செயலர் ராகவன் அறிக்கை.

‘ரீல்’ ஹீரோக்கள், ‘ரியல்’ ஹீரோக்களாக முயற்சிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு, நடிகர் விஜய்க்கு மட்டுமல்ல; நடிகர் ரஜனிகாந்த் உள்ளிட்ட அத்தனை திரை உலகத்தை சேர்ந்தவர்களுக்காகவும் தான்.
– விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வன்னி அரசு

‘எல்லாரையும் விட அதிக சம்பளம் வாங்கும் நடிகர் விஜய், வரி விலக்கு கேட்டது தான், இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோக்!’ எனக் கூறும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வன்னி அரசு அறிக்கை.

தமிழகத்தை பொறுத்தவரை கொங்குநாடு என்று யாரும் கோரிக்கை வைக்கவில்லை. அப்படி வைத்தாலும், அதை காங்கிரஸ் கட்சி ஆதரிக்காது. இது ஒரு, ‘டிரையல் பலுான்’ போன்றது; வேறு ஏதோ ஒரு காரணத்துக்காக பறக்க விடுகின்றனர்.
– காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம்

‘ஒரு காரணமும் இல்லை. தமிழக அரசுக்கு மத்திய அரசின் எச்சரிக்கையாக தான் பார்க்கப்படுகிறது…’ என, சொல்ல தோன்றும் வகையில், காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் பேட்டி.

AdvertisementSource link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *