Share on Social Media


ராய்ப்பூர் : ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினரை, நக்சலைட் அமைப்பினருடன் ஒப்பிட்டு, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கரில் கபிர்தாம் மாவட்டம் கவார்தாவில் சமீபத்தில், ஆர்.எஸ்.எஸ்., பேரணி நடந்தது. அப்போது நடந்த வன்முறை தொடர்பாக விசாரிக்கும்படி, மாநில அரசுக்கு கவர்னர் அனுசுயா உய்கே கடிதம் எழுதியுள்ளார்.இது குறித்து பூபேஷ் பாகேல் கூறியுள்ளதாவது:
நக்சலைட் அமைப்பில், ஆந்திரா, தெலுங்கானாவில் உள்ள தலைவர்கள் கூறியபடி, இங்குள்ள அதன் ஆதரவாளர்கள் செயல்படுகின்றனர். அதுபோலவே, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினரும், மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள தலைமையகம் கூறுவதை கேட்டு செயல்படுகின்றனர்.ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு தெரிந்தது பிரிவினைவாதம் மற்றும் மதவாதம் மட்டுமே. வன்முறையைத் தூண்டி, மக்களை அச்சத்தில் வைத்திருக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

பூபேஷ் பாகேலின் பேச்சு, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய பேச்சுக்கு, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும், பா.ஜ.,வும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *