Share on Social Media


நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் கடந்த மாத தொடக்கத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். அவருடன் மேலும் 7 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் கடந்த மாதம் 29-ம் தேதி மும்பை உயர் நீதிமன்றத்தால் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் உத்தரவு நகல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் ஆர்யன் கான் ஏன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பதை நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஆர்யன் கான்

ஆர்யன் கான், அர்பாஸ் மெர்ச்சண்ட், முன்முன் தமாசா ஆகியோர் போதைப்பொருள் தொடர்பான சதியில் ஈடுபட்டதற்கான எந்த வித ஆதாரமும் இல்லை என்று தீர்ப்பு நகலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மூன்று பேரும் கப்பலில் பயணம் செய்தனர் என்பதற்காக அவர்கள் போதைப்பொருள் சதியில் ஈடுபட்டதாக கருதிவிட முடியாது என்றும், விசாரணை அதிகாரி பதிவு செய்ததாக கூறப்படும் ஒப்புதல் வாக்குமூலம் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது இணைக்கப்படவில்லை என்பதால் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அறிக்கையை நம்ப முடியாது என்றும் நீதிபதி தனது ஜாமீன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: ஆர்யன் கான் வழக்கு விசாரணையிலிருந்து அதிகாரி சமீர் வான்கடே நீக்கம்?! – அடுத்து என்ன?

ஜாமீன் வழங்கிய போது மூவரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என்று கோர்ட் நிபந்தனை விதித்திருந்தது. அதன்படி முதல் வாரத்தில் ஆர்யன் கான் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் ஆஜரான போது, இரவு வரை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆர்யனிடம் சிறப்பு விசாரணைக் குழுவும் விசாரணை நடத்தியது. ஆர்யன் கானை கைது செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வாங்கடேயும் இவ்வழக்கு விசாரணையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதோடு அதனை விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *