Share on Social Media


திருப்பத்தூர்: ஆம்பூரில் கொட்டும் மழையில் சிக்னல் கோளாறை சரிசெய்துவிட்டு திரும்பிய ரயில்வே ஊழியர்கள் இரண்டு பேர் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கன்னிகாபுரம் பகுதியில் உள்ள பெங்களூரு – சென்னை ரயில்வே மார்க்கத்தில் கனமழை காரணமாக சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஜோலார்பேட்டையை சேர்ந்த ரயில்வே பொறியாளர் முருகேசன் மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்த டெக்னீசியன் பர்வேஷ் குமார் ஆகியோர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சிக்னல் கோளாறை சரிசெய்துவிட்டு மாற்று தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்தனர். 

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் ஜோலார்பேட்டையில் இருந்து ரேணிகுண்டா நோக்கி சென்ற சரக்கு ரயில் மோதி இருவரும் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிக்னல் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இருவர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *