NTLRG 20201101180928921901 Tamil News Spot
Share on Social Media

ஆமிர்கான் மீது விதிமீறல் புகார்

01 நவ, 2020 – 18:09 IST

எழுத்தின் அளவு:


ஆமிர்கான்-மீது-பாஜக-எம்எல்ஏ-விதிமீறல்-புகார்

கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டிருந்த சினிமா படப்பிடிப்புகள் தற்போது, அரசாங்கம் அறிவுறுத்தியுள்ள சுகாதார பாதுகாப்பு விதிகளின்படி தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் பாலிவுட் நடிகர் ஆமீர்கான் நடித்து வரும், லால் சிங் சத்தா படத்தின் படப்பிடிப்பும் பல்வேறு லொக்கேஷன்களில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத் மாவட்டத்திலுள்ள டிரோனிகா நகரத்தில் இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் அந்த பகுதியை சேர்ந்த லோனி தொகுதி எம்எல்ஏ நந்து கிஷோர் குஜார் என்பவர் ஆமீர்கான் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ஆமீர்கான் அரசு அறிவித்துள்ள அறிவுறுத்தலின்படி முககவசம் அணியவில்லை என்றும் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் படப்பிடிப்பு நடந்த இடத்தில் மிகப்பெரிய கூட்டத்தை கூட்டினார் என்றும் இவற்றின் மூலம் அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறை விதிகளை ஆமிர்கான் மீறியுள்ளார் என்றும் அந்த குற்றச்சாட்டில் குறிப்பிட்டுள்ளார் எம்எல்ஏ நந்து கிஷோர் குஜார்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *