Share on Social Media


ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கைப்பற்றிய போது உள்நாடு, வெளிநாடு என அந்த நாட்டில் வாழ்ந்து வந்த மக்கள் பலர் தங்களுக்கு பயணம் செய்ய வாய்ப்பு கிட்டுகின்ற விமானத்தில் ஏறி நாட்டை விட்டு தப்பிச் சென்றனர்.

image

அப்படித்தான் ஆப்கான் நாட்டை சேர்ந்த குடும்பம் ஒன்று தப்பித்து தற்போது அமெரிக்காவில் உள்ள ஆப்கான் அகதிகள் முகாமில் தஞ்சம் அடைந்துள்ளனர். 

சொந்த நாடு, வீடு என அனைத்து உடமைகளையும் இழந்தவர்களுக்கு மத்தியில் பிறந்து இரண்டு மாதங்களான தங்களது இளைய மகனான சோஹைலை அந்த குடும்பத்தின் தம்பதியரான மிர்சா அலி மற்றும் சுரையா தவறவிட்டுள்ளனர். அதனால் இருவரும் புத்திர சோகத்திற்கும் ஆளாகியுள்ளனர். 

ஆப்கான் நாட்டின் காபூல் விமான நிலைய வாசலில் விமானம் ஏற காத்திருந்த அவர்களிடம் விமான நிலையத்தின் 16 அடி உயர் சுவற்றில் நின்ற படி பேச்சு கொடுத்த அமெரிக்க பாதுகாப்பு படை வீரர் ஒருவர், ‘உதவி ஏதேனும் வேண்டுமா?’ எனக் கேட்டுள்ளார். கூட்ட நெரிசலில் இருந்து குழந்தை சோஹைலை காக்கும் நோக்கில் அவர்கள் தங்களது பச்சிளம் குழந்தையை கொடுத்துள்ளனர். 

image

பின்னர் அவர்கள் மற்றொரு வாசல் மூலமாக விமான நிலையத்திற்குள் வந்துள்ளனர். உடனடியாக தங்கள் பிள்ளை சோஹைலை பெறும் நோக்கில் அவர்கள் சென்று பார்த்த போது அவர்களுக்கு எஞ்சியது ஏமாற்றம் மட்டுமே. விமான நிலையத்தில் அங்கும், இங்கும் தேடிய அவர்களுக்கு பிள்ளை கிடைக்கவில்லை. பின்னர் கத்தார், ஜெர்மனி வழியாக அமெரிக்காவுக்கு அவர்கள் வந்து சேர்ந்துள்ளனர். இருப்பினும் பிள்ளை பாசம் அவர்களை அங்கிருந்தபடியே தேட வைத்துள்ளது. 

தற்போது ‘MISSING BABY’ என்ற அடையாளத்துடன் ஆப்கான் அகதிகள் முகாமில் தங்கி இருப்பவர்கள் சமூக வலைத்தளங்களில் குழந்தை சோஹைலின் படத்தை பகிர்ந்து வருகின்றனர். எப்படியும் குழந்தையை கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர்கள் சொல்கின்றனர். 

இதையும் படிக்கலாம் : நியூசிலாந்தை வீழ்த்துமா ஆப்கான்? டி20 உலகக்கோப்பையில் பெரிய அணிகளை வீழ்த்திய சின்ன அணிகள்! 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *