Share on Social Media


ஆப்கானிஸ்தானை முழுமையாக தங்கள் பிடியில் கொண்டுவர அரசுப் படைகளுடன் தலிபான்கள் நடத்தி வரும் சண்டை தீவிரமடைந்துள்ளது.
 
தலிபான்கள் ஆதிக்கம் வரும் முன் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதற்காக அந்நாட்டு மக்களில் பலர் பாஸ்போர்ட் அலுவலகங்களை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதற்காக தலைநகர் காபூலில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் தினசரி 10 ஆயிரம் பேராவது குவிகின்றனர். ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக நிலை கொண்டிருந்த அமெரிக்க படைகள் விரைவில் வெளியேற உள்ளன.
 
இதையடுத்து ஆப்கானிஸ்தான் அரசுப் படைகளை முறியடித்து அந்நாட்டில் பெரும்பாலான பகுதிகளை பழமைவாத தலிபான்கள் கைப்பற்றிவிட்டனர். தலிபான்களின் ஆட்சியில் கட்டுப்பாடுகள் கடுமையாக அதிகரிக்கும் என மக்கள் அஞ்சுகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Dk5QeVjKabk Tamil News Spot



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *