Share on Social Media


காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள எந்த ஒரு தூதரகம் மீதும் தாக்குதல் நடத்த மாட்டோம் என்று தலிபான் இயக்கம் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களின் நலனுக்காக மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்களையும் வரவேற்போம். எந்த ஒரு நாட்டுக்கு எதிராகவும் ஆப்கன் மண்ணை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என தலிபான் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இந்தியாவுக்கு எதிராக ஆப்கன் மண் பயன்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு தலிபான் இயக்கத்தினர் விளக்கம் அளித்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டு தீவிரவாத இயக்கங்களுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கன் மக்களுக்கு இந்தியா உதவிகரமாக இருப்பதை வரவேற்கிறோம் என்று தலிபான் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *