Share on Social Media

சென்னை : தங்கம் விலை அதிரடி குறைவால் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்த செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் விலையேற்றம் இருந்தது. ஆனால், வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக கடந்த ஒரு வாரத்தில் தொடர்ச்சியாக தங்கம் விலை குறைக்கப்பட்டது. நேற்று ஆபரண தங்கத்தின் விலை 176 ரூபாய் குறைந்து 35,440 ரூபாய்க்கு விற்பனையானது.இன்றும் தங்கம் விலை கடுமையாக வீழ்ச்சியை கண்டுள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்று இங்கே பார்க்கலாம்.

சென்னையில் இன்று (செப்டம்பர் 17) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,365 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 4,485 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 35,472 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 400 ரூபாய் குறைந்து 34,920 ரூபாய்க்கு விற்பனையாகிறது.வெள்ளி விலை  இன்று உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ1.50 குறைந்து ரூ.65.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 65,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *