Share on Social Media


சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பள்ளி கட்டடங்கள் இடித்து அகற்றும் பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

திருநெல்வேலியில், அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து, மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர்; நான்கு பேர் படுகாயம்அடைந்தனர்.இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் முழுதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி கட்டடங்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டது.பள்ளிக்கல்வித் துறை, வருவாய் துறை, பொதுப்பணித் துறைகளைச் ஒருங்கிணைத்து குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குழுவிலும், ஓர் உதவி கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர், முதுகலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், செயற்பொறியாளர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் பள்ளி கட்டட சேதங்களை கணக்கெடுக்கின்றனர்.சென்னைசென்னையில் உள்ள 1,448 பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்ய, 48 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.தமிழகம் முழுதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்ய, தனித்தனியே குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.இதன்படி, சென்னையில் உள்ள, 1,448 பள்ளிகளின் கட்டடங்களை நேரில் ஆய்வு செய்ய, 48 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், சென்னையில் உள்ள 280 மாநகராட்சி பள்ளிகளின் கட்டடத்தின் தரம் குறித்து ஆய்வு செய்ய, 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் நேற்று முதல் ஆய்வு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன.அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் சேதமடைந்த கட்டடங்களை பூட்டி, ‘சீல்’ வைக்கவும், அவற்றின் அருகில் மாணவர்கள் செல்லாமல் பாதுகாப்பு வளையங்கள் ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.மோசமான கட்டடங் களை மாணவர்களுக்கு பாதிப்பின்றி, இடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இன்னும் மூன்று நாட்களில் இந்த பணிகளை முடிக்க, பள்ளி கல்வி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.செங்கல்பட்டுசெங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 1,265 பள்ளிகள் உள்ளன.இவற்றில் 24 குழுவினர் ஆய்வு செய்து 402 சேதமடைந்த கட்டடங்களை கணக்கெடுத்தனர். இதில், 89 கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளன.-காஞ்சி”காஞ்சிபுரம் மாவட்டத்தில் பழைய கட்டடங்களை கண்டறிய 16 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 95 பழைய கட்டடங்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன; கணக்கெடுப்பு பணி நடக்கிறது. ஒரு வாரத்திற்குள், பழைய பள்ளி கட்டடங்கள் அனைத்தும் இடித்து அகற்றப்படும்,” என்று, மாவட்ட கலெக்டர் ஆர்த்தி கூறினார்.

திருவள்ளூர்திருவள்ளூர் மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், 1,663 உள்ளன. இதில், 215 கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. ஏற்கனவே, 105 கட்டடங்களை கடந்த மூன்று மாதங்களில் பள்ளிக்கல்வித் துறையினர் இடித்து அகற்றி உள்ளனர். மீதமுள்ள 110 கட்டடங்கள் இடித்து அகற்றும் பணி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
– நமது நிருபர் குழு –



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *