Share on Social Media

கோவை: ரஷ்யாவில் நடக்கவுள்ள உலக கோப்பை செஸ் தொடருக்கு கோவை கல்லுாரி மாணவர் இனியன் தகுதி பெற்றார்.

ஈரோடு மாவட்டம், இடையன்காட்டு வலசு கிராமத்தை சேர்ந்த இனியன். கோவை தனியார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு பி.பி.ஏ., படித்து வருகிறார். ஐந்து வயதில் ஆரம்பித்த இனியனின் வெற்றிக்கான காய் நகர்த்தல்கள், 16 வயதில் கிராண்ட் மாஸ்டர் அங்கீகாரம் பெற்று தந்தது.2021ல் சர்வதேச பல்கலை.,இடையிலான செஸ் போட்டியில் இரண்டாமிடம் பிடித்து அசத்தினார்.

தற்போது, உலக கோப்பை செஸ் போட்டிக்கான தகுதிச் சுற்று போட்டிகள் ‘ஆன்லைன்’ மூலம் நடந்தது. இப்போட்டியில், இனியன் முதலிடம் பிடித்து உலக கோப்பைக்கு தகுதி பெற்றார்.

இது குறித்து, ‘தினமலர்’ நாளிதழுக்கு அளித்த பேட்டி :

* இளம் வயதில் உலக கோப்பை செஸ் போட்டியில் பங்கேற்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

சிறு வயதிலிருந்தே செஸ் விளையாட்டின் மீது ஆர்வம். பல்வேறு வகையான போட்டிகளில் பங்கேற்ற அனுபவங்களின் மூலம் உலக கோப்பை செஸ் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளேன். இளம் வயதில் பங்கேற்பதின் மூலம் போட்டி அனுபவம், விளையாட்டு நுணுக்கங்களை கற்றுக்கொள்ள முடியும்.

* ஆன்லைன் மூலம் செஸ் விளையாடுவதில் ஏற்படும் சிரமம் பற்றி ?

எதிரில் விளையாடும் நபரை பார்த்தே விளையாடி வந்துள்ளோம். தற்போது,ஆன்லைனில் விளையாடும் போது, கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. அடிக்கடி ‘நெட் ஓர்க்’ பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது. உலக கோப்பை செஸ் போட்டி ஆன்லைனில் கிடையாது.

* இளைஞர்கள் மத்தியில் செஸ் விளையாட்டு மீது ஆர்வம் எப்படி உள்ளது ?

பள்ளி, கல்லுாரி மாணவவர் மத்தியில் செஸ் விளையாட்டின் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது. மாவட்டம், மாநில செஸ் அமைப்புகள் ஊக்கப்படுத்துவதால், சிறந்த வீரர்களை உருவாக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *