Share on Social Media

ஒரே வங்கியில் உள்ள வங்கிக் கணக்கில் தவறுகள் நடந்தால்?

தங்கள் வங்கிக் கணக்கும் தாங்கள் தவறுதலாகப் பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்தவரின் வங்கிக் கணக்கும் ஒரே வங்கியாக இருந்தால், தாங்கள் தங்களது புகாரை தகுந்த ஆதாரங்களுடன் வங்கியில் கொடுத்தால், உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்தப் பணத்தை உங்கள் வங்கிக் கணக்குக்கு மீண்டும் கிரெடிட் செய்துவிடுவார்கள். இதில் சில சமயம் தவறுதலாகப் பணம் கிரெடிட் செய்யப்பட்டவரின் ஒப்புதலைப் பெற்று, பிறகு உங்கள் வங்கிக் கணக்குக்கு அந்தப் பணத்தை மாற்றம் செய்து கொடுப்பார்கள். நடைமுறையில் இதற்கு சில நாள்கள் ஆகலாம்.

தங்கள் வங்கிக் கணக்கும் தாங்கள் தவறுதலாக டிரான்ஸ்ஃபர் செய்த பணத்தின் வங்கிக் கணக்கும் வேறு வேறு வங்கியாக இருந்தால்?

இப்படிப்பட்ட சமயத்தில் இந்த விஷயம் கொஞ்சம் சிக்கலாகி விடுகிறது. இதில் இரு வங்கிகள் தொடர்புடையதால் தாங்கள் தங்கள் வங்கிக்குச் சென்று தவறான வங்கி கணக்குக்கு பணம் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பித்து புகார் அளித்தவுடன், அப்படித் தவறுதலாகப் பணம் கிரெடிட் செய்யப்பட்ட நபருடைய வங்கியிடம் பேசி தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள். இந்தச் சூழ்நிலையில் தவறுதலாகப் பணம் கிரெடிட் செய்யப்பட்டவரின் ஒப்புதலைப் பெறாமல் அவருடைய வங்கி எந்த நடவடிக்கையும் எடுக்காது. ஆகவே, இதில் உங்கள் பணத்தைத் திரும்ப பெறுவதற்கு 5-லிருந்து 20 நாள்கள் வரைகூட ஆகலாம்.

Bank (Representational Image)

Bank (Representational Image)

சம்பந்தப்பட்டவர் ஒப்புதலை தரவில்லை என்றால்?

தவறாகப் பணம் கிரெடிட் செய்யப்பட்ட வங்கிக் கணக்குக்கு உரியவர் தன்னுடைய வங்கிக் கணக்கிலிருந்து அந்தப் பணத்தை திரும்ப எடுப்பதற்கு ஒப்புதலை தரவில்லை என்றாலோ, அந்தப் பணத்தை எடுத்து செலவழித்துவிட்டாலோ அவர் மீது சட்டபூர்வமான நடவடிக்கையை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. இதில், தவறான விவரங்களைக் குறிப்பிட்டு பணத்தை நாம் டிரான்ஸ்ஃபர் செய்திருந்தால், உங்கள் வங்கியோ அவருடைய வங்கியோ ஒத்துழைப்பைத் தருவார்களே தவிர, சட்டபூர்வ நடவடிக்கையை நீங்கள்தான் எடுக்க வேண்டும்.

இந்தச் சூழ்நிலையில் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு சில நாள்களில் இருந்து மாதங்கள் வரைகூட ஆகலாம்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *