Share on Social Media


திருமலை:  திருப்பதியில் நடைபெற்ற தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக 3 நாள் சுற்றுப்பயணமாக கடந்த சனிக்கிழமை  உள்துறை அமைச்சர் அமித்ஷா திருப்பதி வந்தார். மூன்றாவது நாளாக நேற்று, திருப்பதி தாஜ் ஓட்டலில் ஆந்திர மாநில பாஜ நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை நடத்தினார். இதுகுறித்து மாநில பாஜ தலைவர் சோமு வீரராஜு நிருபர்களிடம் கூறியதாவது: ‘ஆந்திராவில் ஆளும் கட்சிக்கு மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தும் விதமான சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, கட்சியில் புதியவர்களை இணைத்து 2024ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பாஜ ஆட்சிக்கு வரும் விதமாக வளர்ச்சி காண வேண்டும் என பல ஆலோசனைகளை அமித்ஷா வழங்கினார்.

ஆந்திர மாநில வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு மேலும் பல உதவிகளை வழங்க வேண்டும் என பாஜக சார்பில் கேட்டுக் கொண்டோம். அதற்கு அவரும் ஏற்கனவே ஆந்திர மாநிலத்திற்கு ரயில்வே, தேசிய நெடுஞ்சாலைகள், ஊரக வளர்ச்சி திட்டத்தில் பல திட்டங்கள் கொண்டு வந்திருப்பதாகவும் தொடர்ந்து ஆந்திர மாநில வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் உறுதி அளித்தார். இதற்கு முன்னதாக கட்சியை வலுப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் ெகாண்டார்’. என்றார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *