Share on Social Media

புதுடெல்லி: ஒரே மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை 18வது முறையாக நேற்றும் உயர்த்தப்பட்டது. இதனால், தெலங்கானா, ஆந்திர மாநிலங்களின் பெரும்பாலான மாவட்டங்களில் விலை ரூ.100 தாண்டியது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினத்தோறும், மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை படுவீழ்ச்சி அடைந்தது. இருந்தபோதும், மத்திய அரசு கலால் வரியை உயர்ந்தி பொதுமக்களுக்கு பலன் எதுவும் கிடைக்காமல் செய்தது. சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தல் காரணமக பெட்ரோல், டீசல் விலையில் ஒரு மாதம் காலம் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. தேர்தல் முடிந்ததும், பெட்ரொல் மற்றும் டீசல் விலையும் தினமும் உயர தொடங்கியது.

அதன்படி, தொடர் விலை ஏற்றம் காரணமாக ராஜாஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் சில பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100ஐ கடந்து விற்பனையாகி வருகிறது. டெல்லி, தமிழ்நாடு, உள்ளிட்ட பல மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை உச்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஒரு மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை 18வது முறையாக நேற்றும் உயர்ந்துள்ளது. அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 27 பைசாவும், டீசலுக்கு 283 பைசாவும் உயர்ந்தது. இந்த 18 நாளில் பெட்ரோல் 4.36, டீசல் 4.93 ஆக உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை நேற்று உயர்ந்ததால் 2 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் சதம் அடித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100ஐ தாண்டியது. விசாகப்பட்டினத்தில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு 99.75, டீசலுக்கு 94.08க்கு விற்பனை செய்யப்பட்டது.

தெலங்கானாவில் உள்ள அடிலாபாத், நிசாமாபாத்தில் பெட்ரோல் லிட்டருக்கு முறையே 100.57, 100.17 விற்பனையானது. டெல்லியில் நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 94.76, டீசல் 85.66க்கு விற்பனை செய்யப்பட்டது. கச்சா எண்ணெய் விலை 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பீப்பாய் 71 டாலருக்கு அதிகமானதால் சில்லறை எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

நெருங்கும் கர்நாடகா
கர்நாடக மாநிலம், பெல்லாரியில் பெட்ரோல் லிட்டருக்கு 99.83, பெங்களூருவில் 97.98க்கும் நேற்று விற்கப்பட்டது. இதேபோல், பல மாநிலங்களிலும் பெட்ரோல் விலை 100ஐ நெருங்கி வருகிறது. இதனால், கர்நாடகா உட்பட பல மாநிலங்களிலும் பெட்ரோல் விலை விரைவில் சதமடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *